2 ஆண்டுகளாக கிடப்பில் கிடக்கும் கஸ்தூரிராஜாவின் படம்!

Bookmark and Share

2 ஆண்டுகளாக கிடப்பில் கிடக்கும் கஸ்தூரிராஜாவின் படம்!

ராஜ்கிரண், மீனா நடித்த என் ராசாவின் மனசிலே மற்றும் ஆத்தா உன் கோயிலிலே, சோலையம்மா, வீரத்தாலாட்டு, வீரம் வெளஞ்ச மண்ணு, துள்ளுவதோ இளமை உள்பட பல படங்களை இயக்கியவர் கஸ்தூரிராஜா.

இதில் துள்ளுவதோ இளமை படத்தில் தனது மூத்த மகன் செல்வராகவனையும், இளைய மகன் தனுஷையும் அறிமுகம் செய்தார் அவர். அதையடுத்தும், ட்ரீம்ஸ், இது காதல் வரும் பருவம் போன்ற படங்களை இயக்கிய கஸ்தூரிராஜா, கடைசியாக 'காசு பணம் துட்டு' என்ற படத்தை தயாரித்து, இயக்கினார்.

அப்படத்தில் மித்ரன், சானியா, பாலா, வினோத், அஜீத்ராஜா ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர். 2014 லேயே படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி விட்டது அப்படத்தை பார்த்த விநியோகஸ்தர்கள் யாரும் வாங்க முன்வரவில்லை.

இருப்பினும் மனம் தளராத கஸ்தூரிராஜா, இப்போது வரை அந்த படத்தை வெளியிடுவதற்கான முயற்சிகளை செய்து கொண்டிருக்கிறார். ஆனால் இப்போது, இன்னும் வருடங்களாகி விட்டால், படம் ரொம்ப பழசாகி விடும் என்பதால், அடுத்தபடியாக யாரும் படத்தை வாங்க முன்வராதபட்சத்தில், தானே வெளியிடவும் திட்டமிட்டுள்ளாராம் கஸ்தூரிராஜா. 


Post your comment





Related News
எச்.ராஜாவின் பேச்சைக் கேட்டு வாயை மூடி நிற்கிறது போலீஸ் - நடிகர் சித்தார்த்
மிகப்பெரிய பொறுப்பு வந்து சேர்ந்திருக்கிறது - ஆரவ்
வசூல் சாதனையில் சீமராஜா! - வேற லெவல் வரவேற்பு
சீமராஜா படத்தில் எங்கள் முந்தைய படங்களில் இருந்து சற்று மேம்பட முயற்சித்திருக்கிறோம் - இயக்குனர் பொன்ராம்!
ரசிகர்களுக்கு இரட்டை விருந்து கொடுக்கும் சிவகார்த்திகேயன்
என் வேலையை எளிதாக்கியது அவர்கள்தான் - பாடலாசிரியர் யுகபாரதி
கமல் அழகாக இருந்ததால் தான் சப்பாணியாக நடிக்க வைத்தேன் - பாரதிராஜா
சீமராஜா படத்தில் கட்டுப்பாடுகளை உடைத்து சுதந்திரம் கொடுத்தார் ஆர்.டி.ராஜா - முத்துராஜ் மகிழ்ச்சி
சோபியா விவகாரம்: ரஜினி மீது கஸ்தூரி பாய்ச்சல்
சிவகார்த்திகேயனின் சீமராஜா வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions