பா.ஜ.வில் இணைந்தார் தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா!

Bookmark and Share

பா.ஜ.வில் இணைந்தார் தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா!

இயக்குநரும், நடிகர் தனுஷின் தந்தையும், ரஜினியின் சம்பந்தியுமான கஸ்தூரி ராஜா பா.ஜ., கட்சியில் தன்னை இணைத்து கொண்டார். என் ராசாவின் மனசிலே, நாட்டுப்புற பாட்டு, எட்டுப்பட்டி ராசா, என் ஆச ராசாவே, கும்மிப்பாட்டு, கரிசகாட்டுப்பூவே போன்ற கிராமத்து மண் சார்ந்த படங்களை இயக்கியவர் கஸ்தூரி ராஜா.

நடிகர் தனுஷின் தந்தையும், நடிகர் ரஜினிகாந்தின் சம்பந்தியும் ஆவார். தற்போது இவர் காசு பணம் துட்டு என்ற படத்தை இயக்கியுள்ளார். இப்படம் விரைவில் ரிலீஸாக உள்ளது.

கஸ்தூரி ராஜாவுக்கு முன்பு போல் படங்கள் இயக்கும் வாய்ப்புகள் அமையவில்லை. இந்தசூழலில், கஸ்தூரி ராஜா திடீரென அரசியலில் இறங்கியுள்ளார். இவர் பா.ஜ., கட்சியில் தன்னை இணைத்து கொண்டுள்ளார். தமிழகத்தில் பா.ஜ.வை வலுப்படுத்த பா.ஜ.வின் தேசிய தலைவர் அமித் ஷா அவ்வப்போது தமிழகம் வந்து செல்கிறார். அதன்படி இன்று கோவை வந்தார் அமித்ஷா.

இங்கு பா.ஜ.வின் செயற்குழு கூட்டம் நடந்தது. அப்போது அங்கு வந்திருந்த கஸ்தூரி ராஜா, தன்னை பா.ஜ. கட்சியில் இணைத்து கொண்டார். அவருக்கு பா.ஜ.வின் உறுப்பினர் அட்டையை அமித் ஷா வழங்கினார்.

பா.ஜ. கட்சி, நடிகர் ரஜினிகாந்த்தை தங்களது கட்சியில் இழுக்க தொடர்ந்து முயற்சித்து வருகிறது. ஆனால் ரஜினியோ பிடி கொடுக்காமல் நழுவி கொண்டே செல்கிறார்.

இந்தசூழலில் அவரது சம்மந்தியும், இயக்குநரும், தனுஷின் தந்தையுமான கஸ்தூரி ராஜா, பா.ஜ.வில் இணைந்துள்ளது மிகவும் கவனிப்பட வேண்டிய ஒன்றாக தெரிகிறது.


Post your comment





Related News
சிம்பு படத்திற்கு தடை கேட்கும் தயாரிப்பாளர் - வீடியோ வெளியிட்டு ரசிகர்கள் எதிர்ப்பு
ஆக்‌‌ஷன் ஹீரோவாகும் சிவகார்த்திகேயன்
பாடல் காப்புரிமை சம்பந்தப்பட்ட வழக்கு - இளையராஜா மீண்டும் எச்சரிக்கை
எச்.ராஜாவின் பேச்சைக் கேட்டு வாயை மூடி நிற்கிறது போலீஸ் - நடிகர் சித்தார்த்
மிகப்பெரிய பொறுப்பு வந்து சேர்ந்திருக்கிறது - ஆரவ்
வசூல் சாதனையில் சீமராஜா! - வேற லெவல் வரவேற்பு
சீமராஜா படத்தில் எங்கள் முந்தைய படங்களில் இருந்து சற்று மேம்பட முயற்சித்திருக்கிறோம் - இயக்குனர் பொன்ராம்!
ரசிகர்களுக்கு இரட்டை விருந்து கொடுக்கும் சிவகார்த்திகேயன்
என் வேலையை எளிதாக்கியது அவர்கள்தான் - பாடலாசிரியர் யுகபாரதி
கமல் அழகாக இருந்ததால் தான் சப்பாணியாக நடிக்க வைத்தேன் - பாரதிராஜா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions