கதகளியில் சர்ச்சைக்குரிய வசனம்: தணிக்கைக்குழு அதிகாரி பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு

Bookmark and Share

கதகளியில் சர்ச்சைக்குரிய வசனம்: தணிக்கைக்குழு அதிகாரி பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு

மதுரை கோ.புதூரைச் சேர்ந்தவர் கே.பி.மணிபாபா. தமிழ்நாடு வண்ணார்பேரவை மாநில பொதுச்செயலாளரான இவர், மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:- 

நடிகர் விஷால் நடித்த கதகளி திரைப்படம் பொங்கல் விழாவின் போது வெளியானது. இந்த படத்தில் வண்ணார் சமூகத்தைச் சேர்ந்த மக்களை மட்டுமல்லாமல் மருத்துவர், அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த மக்களையும் இழிவுபடுத்தும் வகையில் வசனங்கள் இடம் பெற்றுள்ளன.

இந்த வசனங்கள் வண்ணார், மருத்துவர், அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த மக்களை புண்படுத்துவதாகவும், அவமதிப்பதாகவும் உள்ளன. 

இதன்காரணமாக இந்த சமூகத்தைச் சேர்ந்த மக்கள் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். திரைப்படங்களில் இதுபோன்ற வசனங்களை அனுமதிப்பது சமூக நீதிக்கு எதிரானது.

இந்த வசனங்களை தணிக்கை துறையின் பார்வைக்கு உட்படுத்தி தணிக்கை செய்யவில்லை. எனவே, சர்ச்சைக்குரிய அந்த வசனங்களை நீக்க மத்திய திரைப்பட தணிக்கைக் குழுவிற்கு உத்தரவிட வேண்டும். 

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. 

இந்த மனு நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கு சம்பந்தமாக மத்திய திரைப்பட தணிக்கை தலைமை அதிகாரி பதில் அளிக்க நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டார்.


Post your comment





Related News
ஆந்திர ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்துள்ள கதகளி!
ஜனவரி 22-ல் மீண்டும் கதகளி ஆட வரும் விஷால்!
நாளை 300-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாகும் விஷாலின் கதகளி!
விஷாலின் கதகளி ரன்னிங் டைம் வெளியானது!
இன்னும் 2 தினங்களில் கதகளி ஆடவரும் விஷால்!
பொங்கல் திருநாளுக்கு விருந்தாக 4 படங்கள் வெளியாகின்றன!
இன்னும் 4 நாட்களில் கதகளி ஆடவரும் விஷால்!
கதகளியில் இரண்டாம் பாதியில் பாடல்களே இல்லாமல் விறுவிறுப்பாக அமைந்துள்ளது – விஷால்!
என் நண்பனின் நிஜ வாழ்க்கை கதை கதகளி: பாண்டிராஜ்
கதகளி படத்தில் பாண்டிராஜின் புதிய யுக்தி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions