விஷாலின் கதகளி படத்தின் ஆடியோ ரிலீஸ் தேதி அறிவிப்பு

Bookmark and Share

விஷாலின் கதகளி படத்தின் ஆடியோ ரிலீஸ் தேதி அறிவிப்பு

விஷால் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் ‘கதகளி’. இப்படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்கியுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து விறுவிறுப்பாக பின்னணி பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த படம் வரும் பொங்கல் திருநாளில் வெளியாகவுள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் தற்போது இந்த படத்தின் பாடல் வெளியீடு தேதியை அறிவித்திருக்கின்றனர்.

இப்படத்தின் பாடல்கள் வரும் 24ம் தேதி வெளியாகவுள்ளது. இதே நாளில் பாண்டிராஜ் இயக்கிய மற்றொரு படமான 'பசங்க 2' ரிலீஸ் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ‘கதகளி’ படத்தில் விஷால், கேத்ரின் தெரசா, ரெஜினா, நாசர், கருணாஸ், சூரி உள்பட பலர் நடித்துள்ளார்கள்.

ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைத்துள்ளார். விஷால் மற்றும் பாண்டிராஜ் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் வெளியிடுகிறது.  


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions