'சிகை’ சஸ்பென்ஸ் த்ரில்லர் கதை- கதிர் பதில்!

Bookmark and Share

'சிகை’ சஸ்பென்ஸ் த்ரில்லர் கதை- கதிர் பதில்!

'மதயானைக்கூட்டம்’, 'கிருமி’ படங்களில் தன் நடிப்பால் கவனம் ஈர்த்த கதிர், 'சிகை’ பட ஃபர்ஸ்ட் லுக் மூலம் சோஷியல் மீடியாவில்  வைரலாகியிருக்கிறார்.

சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் ''நான் 1991-ல் பொறந்தவன். இண்டஸ்ட்ரில நான்தான் சின்ன வயசு ஹீரோனு நினைக்கிறேன். அப்பா, அம்மா கோயம்புத்தூர்ல இருக்காங்க. நான் இங்கே தனியா இருக்கேன்.

சிவில் இன்ஜினீயரிங் கடைசி வருஷம் படிக்கும்போது கிடைச்ச வாய்ப்பு 'மதயானைக் கூட்டம்’. மூணு மாசம் பிரேக் எடுத்துக்கிட்டு நடிச்சேன். 'சிகை’ படத்துல வர்ற ஒரு கேரக்டருக்கு பெண் சாயல் தேவைப்பட்டது. இப்போ அதுக்கான கெட்டப் மாற்றம், பிராக்டீஸ்ல இருக்கேன்.'

அப்பா ஒரு முன்னாள் விநியோகஸ்தர். இதுதான் சினிமாவுக்கும் என் குடும்பத்துக்கும் உள்ள தொடர்பு. நடிப்பு என் சின்ன வயசு ஆசை. ஆனா, காலேஜ் வரை அதுக்கு எந்த முயற்சியும் பண்ணலை. 

ஒருநாள் ஜி.வி பிரகாஷ் தயாரிக்கிற ஒரு படத்துக்கு என் வயசு ஹீரோ வேணும்னு சொன்னாங்க. அப்போதான் அவர் மேனேஜர்  மூலமா அவரைச் சந்திச்சேன்; செலெக்ட் ஆனேன். இப்படித்தான் 'மதயானைக்கூட்டம்’ புராஜெக்ட்ல நான் உள்ளே வந்தேன்.''

'சிகை’ சஸ்பென்ஸ் த்ரில்லர் கதை. இந்தக் கதையை இயக்குநர் ஜகதீசன் சொல்லும்போது, அடுத்த சீன் இதுவாதான் இருக்கும்னு யோசிப்பேன். ஆனா, அப்படி இருக்காது. சீனுக்கு சீன் என் எதிர்பார்ப்பை நொறுக்கிட்டே வந்தார். படத்துல மொத்தம் ஒன்பது கதாபாத்திரங்கள். அதுல ஒண்ணுதான் இந்தப் பெண் கதாபாத்திரம். 24 மணி நேரத்துக்குள்ள நடக்குது கதை.''

''படத்தின் ஃபர்ஸ்ட் லுக்குக்கு இப்படி ஒரு ரெஸ்பான்ஸ் வரும்னு நாங்க எதிர்பார்க்கவே இல்லை. பெண் சாயல் உள்ள அந்த போட்டோவுலயே நிறைய சஸ்பென்ஸ் ஒளிஞ்சிருக்கு. கதைக்கு அந்த கேரக்டர் முதுகெலும்பா இருக்கும்.'' என்று கூறினார்.


Post your comment





Related News
பரியேறும் பெருமாள் ஆரம்பம் தான் - பா.இரஞ்சித் சூளுரை
அவளுக்கென்ன அழகிய முகம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு.!
நடிகர் கதிருக்கு விரைவில் திருமணம், பெண் இவர்தானாம்
தனுஷ் ஏன் பேட்டி கொடுக்கவில்லை? வழக்கு பற்றி தம்பதி அதிரடி கேள்வி
கதிருக்கு கைகொடுக்கும் சிம்பு
யார் மகன் வழக்கு: திருப்புவனம் தம்பதியின் புது மனுவால் தனுஷுக்கு சிக்கல்
சிவகார்த்திகேயனுக்கு போட்டியாக களமிறங்கும் இன்னொரு நடிகர்!
சுந்தர் சி.யின் முத்தின கத்திரிக்கா இம்மாதம் வெளியீடு
விசாரணை பாணியில் கதிரின் சிகை!
24 மணி நேரத்துக்குள் 9 கெட்டப்புகளில் வரும் கதிர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions