24 மணி நேரத்துக்குள் 9 கெட்டப்புகளில் வரும் கதிர்

Bookmark and Share

24 மணி நேரத்துக்குள் 9 கெட்டப்புகளில் வரும் கதிர்

‘மதயானைக்கூட்டம்’, ‘கிருமி’ ஆகிய படங்களில் நடிப்பால் கவனம் ஈர்த்த கதிர், ‘சிகை’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மூலம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியிருக்கிறார். ‘சிகை’ படத்தில் பெண் சாயலில் மேக்கப் போட்டு, இவர் கதிரா? என்று கேட்கும் அளவுக்கு தன்னையே மாற்றிக் கொண்டுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, ‘சிகை’ படத்தில் வருகிற ஒரு கதாபாத்திரத்திற்கு பெண் சாயல் தேவைப்பட்டது. அதனால், எனது கெட்டப்பை மாற்றிக் கொண்டுள்ளேன். இப்போது, அந்த கெட்டப்புக்கான பயிற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறேன். இந்த படத்தில் மொத்தம் ஒன்பது கதாபாத்திரங்கள். அதில் ஒன்றுதான் இந்த பெண் கதாபாத்திரம். ‘சிகை’ 24 மணி நேரத்திற்குள் நடக்கிற கதை என்றார்.

இப்படத்தை ஜெகதீசன் சுபு என்பவர் இயக்குகிறார். கதிர் கோவை மாவட்டத்தை சேர்ந்தவர். இவருடைய அப்பா முன்னாள் விநியோகஸ்தர். சிவில் இன்ஜினியரிங் படித்துக் கொண்டிருக்கும் கதிருக்கு சிறு வயதிலிருந்தே நடிக்க வேண்டும் ஆசை இருந்ததாம்.

இருந்தும், காலேஜ் வரை அதற்கான எந்த முயற்சியிலும் ஈடுபடவில்லையாம். கடைசியில், மதயானைக்கூட்டத்துக்கு தன் வயதுடைய இளைஞர் தேவைப்பட்டதை அறிந்து, அதில் தேர்வாகி படத்தில் நடித்து வருகிறார். 


Post your comment





Related News
பரியேறும் பெருமாள் ஆரம்பம் தான் - பா.இரஞ்சித் சூளுரை
அவளுக்கென்ன அழகிய முகம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு.!
நடிகர் கதிருக்கு விரைவில் திருமணம், பெண் இவர்தானாம்
தனுஷ் ஏன் பேட்டி கொடுக்கவில்லை? வழக்கு பற்றி தம்பதி அதிரடி கேள்வி
கதிருக்கு கைகொடுக்கும் சிம்பு
யார் மகன் வழக்கு: திருப்புவனம் தம்பதியின் புது மனுவால் தனுஷுக்கு சிக்கல்
சிவகார்த்திகேயனுக்கு போட்டியாக களமிறங்கும் இன்னொரு நடிகர்!
சுந்தர் சி.யின் முத்தின கத்திரிக்கா இம்மாதம் வெளியீடு
விசாரணை பாணியில் கதிரின் சிகை!
'சிகை’ சஸ்பென்ஸ் த்ரில்லர் கதை- கதிர் பதில்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions