கத்தி தெலுங்கு ரீமேக்கில் ஜூனியர் என்.டி.ஆர்.

Bookmark and Share

கத்தி தெலுங்கு ரீமேக்கில் ஜூனியர் என்.டி.ஆர்.

விஜய் நடிப்பில் கடந்த வருடம் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் ‘கத்தி’. இதில் விஜய் இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். ஏ.ஆர்.முருகதாஸ் இப்படத்தை இயக்கியிருந்தார்.

விவசாயிகளின் தண்ணீர் பிரச்சனையை மையமாக கொண்டு உருவான இப்படம் தமிழ் ரசிகர்களை பெரிதளவு கவர்ந்தது. தற்போது இப்படத்தை தெலுங்கில் ரீமேக் செய்ய ஏற்பாடுகள் நடந்து வருவதாக செய்தி வெளியாகியுள்ளது.    

இதில் விஜய் வேடத்தில் ஜூனியர் என்.டி.ஆர் நடிக்க இருப்பதாக கூறுப்படுகிறது. தில்ராஜூ தயாரிக்கவிருக்கும் இப்படத்தின் கதையை தெலுங்கு ரசிகர்களுக்கு ஏற்றவாறு ஏ.ஆர்.முருகதாஸ் சில மாற்றங்கள் செய்து தர இருக்கிறார்.

விஜய் இந்த படத்தில் கதிரேசன், ஜீவானந்தம் என்ற இரண்டு கேரக்டரில் அபாரமாக நடித்திருந்தார். ஜூனியர் என்.டி.ஆர், விஜய் அளவுக்கு  நடிப்பாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ஏற்கனவே விஜய் நடித்த ‘ஜில்லா’ படத்தை தெலுங்கில் ரீமேக் செய்யும் முயற்சிகளிலும் ஈடுபட்டனர். ஆனால் ஒரு சில காரணங்களால் அந்த முயற்சி கைவிடப்பட்டது. இதனால் டப் செய்து சமீபத்தில் ‘ஜில்லா’ வெளியானது. இது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.


Post your comment





Related News
தளபதி விஜயின் கத்தி ஹிந்தி ரீமேக் ரெடி, படத்தை வாங்கிய முன்னணி இயக்குனர்..!
பா.ரஞ்சித்தை முதன்முதலில் அறிமுகப்படுத்திய தயாரிப்பாளரின் இன்றைய நிலை என்ன தெரியுமா?
சோதனைக்கு நடுவிலும் சாதனை செய்து வெற்றி பெற்ற விஜய்யின் முக்கிய படங்கள்!
கத்தி, மெர்சல் படங்களை தாண்டி ஒரு முக்கியமான விஷயம் விஜய் 62 படத்தில்- முழு விவரம் இதோ
ஸ்ரீதேவி விசயத்தை தள்ளி வச்சிட்டு இத பாருங்க! பலரையும் கவர்ந்த விஜய் ரசிகர்!
தெறிக்கவிடும் தளபதி ரசிகர்கள், திணறும் இணையதளங்கள் - என்ன ஸ்பெஷல் தெரியுமா?
விஜய்யின் திரைப்பயணத்தில் ஏற்பட்ட திருப்பங்கள்- பிறந்தநாள் ஸ்பெஷல்
100வது நாள் கொண்டாட்டத்தில் விஜய்யின் வெற்றி படம்
விஜய் படத்துக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி- ரசிகர்கள் கொண்டாட்டம்
நீங்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்த வடிவேலு வந்துவிட்டார்- ரசிகர்கள் உற்சாகம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions