தாமதமாகும் 'கத்தி, ஆம்பள' தெலுங்கு டப்பிங் ரிலீஸ்

Bookmark and Share

தாமதமாகும் 'கத்தி, ஆம்பள' தெலுங்கு டப்பிங் ரிலீஸ்

விஜய், சமந்தா மற்றும் பலர் நடிக்க ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் கடந்த ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த 'கத்தி' திரைப்படம் வெளியான சமயத்தில் மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்டது.

எதிர்பார்த்தது போலவே வெற்றியும் பெற்றது. அப்போது இந்தப் படத்தை மற்ற மொழிகளில் ரீமேக் செய்து வெளியிட பலரும் போட்டி போடுகிறார்கள் என்றெல்லாம் செய்திகள் வெளியாகின.

தெலுங்கில் பவன் கல்யாண் நடிக்க இந்தப் படத்தை ரீமேக் செய்யப் போகிறார்கள் என்றும் சொன்னார்கள். அதன் பின் அவர் படத்தைப் பார்த்ததாகவும் ஆனால், அந்தக் கதை தனக்குப் பொருத்தமாக இருக்காது என்று அவர் சொல்லிவிட்டதாகவும் சொன்னார்கள்.

தொடர்ந்து 'கத்தி' படத்தை டப்பிங் மட்டும் செய்து வெளியிடலாம் என முடிவெடுத்தார்கள். அதன் பின் அந்தப் படத்தை எப்போது வெளியிடப் போகிறார்கள் என்ற செய்தியே வெளியாகாமல் இருந்தது. ஒரு வழியாக தற்போது படத்தை வெளியிட, டப்பிங் உரிமையை வாங்கிய நிறுவனம் முடிவு செய்துள்ளதாம்.

அடுத்த மாதம் படத்தை வெளியிட அவர்கள் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. அதே போல் விஷால், ஹன்சிகா நடித்து தமிழில் பொங்கலன்று வெளிவந்த 'ஆம்பள' படத்தையும் ஜனவரி 30ம் தேதி தெலுங்கில் 'மகா மகாராஜு' டப்பிங் செய்து வெளியிட முடிவெடுத்திருந்தார்கள்.

ஆனால், இதுநாள் வரை அதைப் பற்றி எந்தத் தகவலும் இல்லை. வெளியீட்டுக்கு முன்பாகவே தெலுங்கு நடிகர் ராணவை வைத்து படத்தின் இசை வெளியீட்டையும் பிரம்மாண்டமாக நடத்தியிருந்தார்கள்.

தெலுங்கில் தொடர்ந்து தமிழிலிருந்து படங்கள் டப்பிங் ஆகி வெளியாவதால் அதன் எண்ணிக்கையை குறைக்கும் நடவடிக்கைகளில் தெலுங்குத் திரையுலகினர் இறங்கியுள்ளதாகத் தெரிகிறது. அதுவும் இந்த படங்களின் தாமதமான வெளியீட்டிற்கான  காரணமாகவும் இருக்கலாம் என்கிறார்கள்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions