தெலுங்கில் 'கத்தி, ஆம்பள, அனேகன்' ஒரே நாளில் ரிலீஸ்...?

Bookmark and Share

தெலுங்கில் 'கத்தி, ஆம்பள, அனேகன்' ஒரே நாளில் ரிலீஸ்...?

தமிழில் தீபாவளியன்று வெளிவந்து வெற்றிகரமாக ஓடிய 'கத்தி' திரைப்படம் அதற்கடுத்த வாரங்களிலேயே தெலுங்கில் டப்பிங் ஆகி வெளியாகும் என்று சொல்லப்பட்டது.

ஆனால், படத்தை நேரடியாக தெலுங்கில் நடிக்க பவன் கல்யாணன் உட்பட சிலர் விருப்பப்பட்டதாகவும், பின்னர் படத்தைப் பார்த்த அவர்கள் தங்களுக்கு இந்தக் கதை பொருத்தமாக இருக்காது என்று நிராகரித்ததாகவும் செய்திகள் வெளியாகின. அதையடுத்து 'கத்தி' படம் டப்பிங் ஆகிதான் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனாலும், படத்தின் வெளியீடு குறித்து அதன் பின் எந்தத் தகவலும் இல்லை.

தற்போது 'கத்தி' படத்தை அடுத்த வாரம் திரையிட உள்ளார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே விஜய் சில வருடங்களுக்கு முன் நடித்த 'காவலன்' திரைப்படத்தையும் டப்பிங் செய்துள்ளார்களாம், அதை இன்று வெளியிட உள்ளார்கள் என்றும் டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அடுத்த வாரம் 'ஆம்பள, அனேகன்' ஆகிய படங்களும், தெலுங்கில் டப்பிங் வெளியீடாக வெளியிட உள்ளார்களாம். 'ஆம்பள' படம் பொங்கலுக்கு வெளிவந்தது. ஜனவரி மாத இறுதியில் பொங்கலுக்கு வெளியாகும் என்று முன்னர் அறிவிக்கப்பட்டது.

அதன் பின் அந்தப் படத்தின் வெளியீட்டையும் தள்ளி வைத்துவிட்டனர். 'அனேகன்' படம் கடந்த வாரம் தமிழில் வெளியானது. இந்தப் படத்தை தெலுங்கில் இன்று வெளியிடுவதாக இருந்தார்கள், பின்னர் இந்தப் படமும் அடுத்த வாரத்திற்கு தள்ளி வைக்கப்பட்டது.

ஆக, அடுத்த வாரம் ஒரே நாளில் 'கத்தி, ஆம்பள, அனேகன்' தெலுங்கில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருந்தாலும் டப்பிங் ஆகும் படங்களின் வெளியீட்டை திடீரெனக் கூட தள்ளி வைத்துவிடுவார்கள்.


Post your comment





Related News
சர்கார், திமிரு புடிச்சவன் என தீபாவளியில் மோதும் 6 படங்கள்
அஜித்தின் இந்த படங்கள் எல்லாம் விஜய்க்காக தயாரிக்கப்பட்டது தானா? இயக்குனரின் ஓபன்டாக்
சினிமாவில் எந்த விதமான குணச்சித்திர பாத்திரங்களில் நடிப்பதற்கு தயாராக இருக்கிறேன்..! - லதா ராவ்
தளபதி நா கிளாசு! இந்தியாவே பேசின படம் மெர்சலு! அமர்க்களப்படுத்திய பாடகர்கள்
விவேக்கின் "எழுமின்" படத்திற்காக தனுஷ் பாடும் பாடல்..!
'போத' படத்தில் 'ஆண் பாலியல் தொழிலாளி'யாக நடித்த நாயகன் விக்கி..!
முக்கிய இடம் பெற்ற கார்த்தியின் கடைக்குட்டி சிங்கம்! ரசிகர்கள் குஷி
மறக்க முடியாத மாஸ் காட்டிய அஜித்! இது தான் கெத்தான சாதனை
சில வருடங்களுக்கு முன் பிரபல நடிகரிடம் தர்ம அடி வாங்கிய மஹத், இந்த கதை தெரியுமா?
ரெஜினாவுக்கு கிடைத்த மிகப்பெரும் ஏமாற்றம்- தனது ரூட்டையே மாற்றிவிட்டார்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions