தமிழ்ப்புத்தாண்டுக்கு கத்தி, அனேகன் படங்கள் ஒளிபரப்பு

Bookmark and Share

தமிழ்ப்புத்தாண்டுக்கு கத்தி, அனேகன் படங்கள் ஒளிபரப்பு

தியேட்டருக்கு கூட்டம் வரவில்லை என்று ஒரு பக்கம் புலம்புகிறார்கள் தயாரிப்பாளர்கள். இன்னொரு பக்கம், அதிக பணத்துக்கு ஆசைப்பட்டு சாட்டிலைட் ரைட்ஸ் விற்கும்போது கூடுதலாக சில லட்சங்களை வாங்கிக் கொண்டு உடனடியாக ஒளிபரப்பும் உரிமையையும் கொடுத்துவிடுகிறார்கள்.

பெரிய தொகைக்கு சாட்டிலைட் ரைட்ஸை வாங்கிய சேனல்கள் சும்மா இருக்குமா? படம் தியேட்டரில் ஓடிக்கொண்டிருக்கும்போதே டிவியில் ஒளிபரப்பி காசை அள்ளுகிறார்கள்.

தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு வரும் 14ஆம் தேதி  அன்று அனைத்து முன்னணி தமிழ் சேனல்களிலும் புதுப் படங்களை ஒளிபரப்பவிருக்கிறார்கள்.  இந்த பட்டியலில் கடந்த பிப்ரவரி 13 ஆம் தேதி வெளியான தனுஷின் 'அனேகன்' படமும் இடம் பிடித்திருப்பதுதான் அதிர்ச்சி.

இம்மீடியட் என்ற பிரிவில் அனேகன் படத்தின் சாட்டிலைட் ரைட்ஸை விற்றுள்ளார். அதனால்தான் அனேகன் படமும் வரும் தமிழ்ப்புத்தாண்டில் ஒளிபரப்பாகும் படங்களின் பட்டியலில் சேர்ந்துவிட்டது.

அனேகன்  படம் ஒளிபரப்பாகும் அதே நாளில், கத்தி படம், கில்லாடி படம், காவியத்தலைவன், மெட்ராஸ், ஜீவா படங்களும் ஒளிபரப்பாக உள்ளன. தமிழ்ப்புத்தாண்டு போன்ற பண்டிகை காலங்களில் புதுப்படங்களைப் பார்க்க தியேட்டர்களுக்குப் படையெடுக்கும் மக்களை வீட்டுக்குள்ளேயே கட்டிப்போட்டுவிட்டன தொலைக்காட்சி சேனல்கள்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions