இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸுக்கு கிடைத்த மரியாதை

Bookmark and Share

இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸுக்கு கிடைத்த மரியாதை

வெள்ளையா இருக்கிறவங்க பொய் சொல்ல மாட்டாங்க என்றொரு கருத்தாக்கம் இருப்பதுபோலவே, வி.ஐ.பி.க்களும் பொய் சொல்ல மாட்டாங்க என்று பலரும் நம்புகின்றனர்.

இந்த நம்பிக்கையை புத்திசாலித்தனமாக சில வி.ஐ.பி.க்கள் பயன்படுத்தி வருகின்றனர். அவர்களில் முக்கியமானவர் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ். சமூக வலைத்தளங்களில் உள்ள தன்னுடைய பக்கத்தில் அடிக்கடி பதிவுகளைப்போட்டு ரசிகர்களுடன் அன்றாடம் தொடர்பில் இருந்து வருகிறார் முருகதாஸ்.

குறிப்பாக 'துப்பாக்கி' படத்திற்கு தன்னுடைய ட்விட்டரை பப்ளிசிட்டிக்கு பயன்படுத்தினார். அதன் பிறகு, அடிக்கடி ட்விட்டர் மூலம் தனது கருத்துக்களை ரசிகர்களுக்கு தெரிவித்து வருகிறார். விஜய்யை வைத்து இயக்கிய 'கத்தி' படத்தின் முதல்நாள் வசூல் எவ்வளவு என்ற விவரத்தை முதலில் வெளியிட்டவர் ஏ.ஆர்.முருகதாஸ்தான்.  

அதையே பிற ஊடகங்கள் செய்தியாக வெளியிட்டன. அடுத்தடுத்த நாட்களில் 'கத்தி' படம் 100 கோடி வசூல் செய்திருப்பதாகவும் சொன்னார் இயக்குனர்  முருகதாஸ். அதை அனைவரும் நம்பினார்கள்.  

விநியோகஸ்தர் சங்க நிர்வாகிகள் புள்ளிவிவரங்களுடன்  தெரிவித்த பிறகே, முருகதாஸ் சொன்ன 100 கோடி வசூல்  மிகைப்படுத்தப்பட்ட தகவல் என்பது தெரிய வந்தது. என்றாலும், முருகதாஸ் தனது ட்விட்டர் மூலம் தெரிவித்து வரும் செய்திகள் ரசிகர்களிடம்  வரவேற்பைப் பெற்றுள்ளது உண்மை.

இந்நிலையில், அவரது ட்விட்டர் கணக்குக்கு கௌரவத்தையும் அங்கீகாரத்தையும் கொடுத்திருக்கிறது ட்விட்டர். கடந்த சில வருடங்களாகவே ட்விட்டரில் அவர் கணக்கு வைத்திருந்தாலும், அதிகாரபூர்வ கணக்கு என ட்விட்டர் அறிவிக்காமலேயே இருந்தது. தற்போது அவரின் @ARMurugadoss என்ற ட்விட்டர் கணக்கிற்கு அதிகாரபூர்வ அங்கீகாரம் கிடைத்துள்ளது.

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸின் ட்விட்டர் கணக்கை இதுவரை 7 லட்சத்து 80 ஆயிரம் பேர் பின் தொடர்ந்து வருகிறார்கள். அதேபோல் அவரின் facebook.com/OfficialARMurugadoss என்ற ஃபேஸ்புக் பக்கமும் ஏற்கெனவே அதிகாரபூர்வ அங்கீகாரம் பெற்றுள்ளது. இந்தப் பக்கத்தை இதுவரை 2 லட்சம் பேர் 'லைக்' செய்துள்ளனர்.


Post your comment





Related News
சர்கார் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்துடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்
கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநில மக்களுக்கு இயக்குனர் A.R முருகதாஸ் ரூபாய் 10 லட்சம் நிதிஉதவி வழங்கியுள்ளார்..!
தளபதி விஜயின் கத்தி ஹிந்தி ரீமேக் ரெடி, படத்தை வாங்கிய முன்னணி இயக்குனர்..!
பரபரப்பான சூழலிலும் ட்ரெண்ட் ஆகும் சர்கார் - விசியம் என்ன தெரியுமா?
கலைஞருக்கு சர்கார் இயக்குனர் முருகதாஸ் புகழாஞ்சலி
முதல்வராக முயற்ச்சிக்கும் விஜய் - பிரபல நடிகர் பரபரப்பு பேட்டி.!
விஜய்யின் சாதனை! ரசிகர்களின் கொண்டாட்டம் மறுபடியும்
இந்தியிலும் தனது ஆதிக்கத்தை செலுத்தியிருக்கும் சர்கார்- விஜய் ரசிகர்களே என்ன விஷயம் தெரியுமா
தமிழ்நாட்டையே மிஞ்சும் கேரளா விஜய் ரசிகர்கள்- சர்காருக்கு எகிறும் எதிர்பார்ப்பு
விஜய்க்கு ராசியான நாள் எது தெரியுமா? மீண்டும் அந்த நாளை பின்தொடருவாரா!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions