பிலிம்ஃபேர் - தனுஷ், மாளவிகாவுக்கு விருது: கத்தி சிறந்த படம்!

Bookmark and Share

பிலிம்ஃபேர் - தனுஷ், மாளவிகாவுக்கு விருது: கத்தி சிறந்த படம்!

62வது பிலிம்ஃபேர் விருது வழங்கும் விழா சென்னையில் நேற்று இரவு நடந்தது. இதில் சிறந்த நடிகராக தனுஷ் (வேலையில்லா பட்டதாரி), சிறந்த நடிகை மாளவிகா (குக்கூ) ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர் அவர்களுக்கு விருது வழங்கப்பட்டது.

சிறந்த திரைப்படமாக விஜய் நடித்த கத்தி படம் தேர்ந்தெடுக்கப்பட்டது. அதை இயக்கிய ஏ.ஆர்.முருகதாஸ் சிறந்த இயக்குனருக்கான விருது வெற்றார். கார்த்தி மெட்ராஸ் படத்தில் நடித்தத்காக சிறந்த நடிகருக்கான விமர்சகர் (கிரிட்டிக் அவார்ட்) விருதினை பெற்றார்.

சிறந்த துணை நடிகராக பாபி சிம்ஹா (ஜிகிர்தண்டா), சிறந்த துணை நடிகையாக ரித்விகா (மெட்ராஸ்) ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

சிறந்த இசை அமைப்பாளர் அனிருத் (வேலையில்லா பட்டதாரி) சிறந்த பாடலாசிரியர் நா.முத்துகுமார் (சைவம்), சிறந்த பாடகர் பிரதீப் குமார் (ஆகாயம் தீ பிடிச்சா நிலா தூங்குமா&மெட்ராஸ்), சிறந்த புதுமுக நடிகை கேத்ரின் தெரசா (மெட்ராஸ்).

சிறந்த புதுமுக நடிகர் துல்கர் சல்மான் (வாய்மூடி பேசவும்) சிறந்த நடன இயக்குனர் ஷோபி (கத்தி) ஆகியோரும் விருது பெற்றனர். இயக்குனர் ஐ.வி.சசிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கக்பட்டது.

இந்த விருது பட்டியலில் வசந்தபாலன் இயக்கிய காவியத் தலைவன் பத்து விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டிருந்தது. ஆனால் ஒரு விருது கூட கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது.


Post your comment





Related News
பரபரப்பான சூழலிலும் ட்ரெண்ட் ஆகும் சர்கார் - விசியம் என்ன தெரியுமா?
விஜய்-முருகதாஸ் மோதல் உறுதி?
விஜய், முருகதாஸ் படத்தின் பட்ஜெட் இத்தனை கோடியா? வெளியான தகவல்
விஜய், முருகதாஸ் 3வது கூட்டணியில் ஏற்பட்ட திடீர் மாற்றம்
மூன்றாவது முறை என்னவாக இருக்கும்- விஜய் ரசிகர்கள் ஆவல்
முருகதாஸின் பர்ஸ்ட் சாய்ஸே விஜய் தானாம்- ஏன் நடக்கவில்லை?
கத்தியின் போது மட்டுமில்லை, இனிமே இப்படித்தான், முருகதாஸ் எடுத்த அதிரடி முடிவு
ஏ.ஆர்.முருகதாஸுக்கு போட்டி போட்டு வாழ்த்து கூறிய அஜித்,விஜய் ரசிகர்கள்!
கத்தி-2ம் பாகமா ?
அடுத்து விஜய்-ஏ.ஆர்.முருகதாஸ் இணையும் வாய்ப்பு கிடைக்குமா..?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions