கத்திசண்டையில் வடிவேலுவும் சூரியும் இணைந்து கலக்கியுள்ளனர்: இயக்குனர் சுராஜ்

Bookmark and Share

கத்திசண்டையில் வடிவேலுவும் சூரியும் இணைந்து கலக்கியுள்ளனர்: இயக்குனர் சுராஜ்

மெட்ராஸ் எண்டர் பிரைசஸ் எஸ். நந்த கோபால் தயாரிப்பில் திரைக்கு வர தயாராக இருக்கும் படம் ‘கத்திசண்டை’. விஷால்- தமன்னா ஜோடி சேர்ந்திருக்கும் இந்த படத்தை சுராஜ் இயக்கி இருக்கிறார். நீண்ட இடைவெளிக்கு பிறகு இதில் வடிவேலு நடித்திருக்கிறார். அவருடன் சூரியும் இணைந்துள்ளார்.

கதை, திரைக்கதை எழுதி, இயக்கியுள்ள சுராஜ் படம் பற்றி கூறும் போது "இந்த படத்தை ஆக்‌ஷன், காமெடி, சென்டிமென்ட் கலந்து உருவாக்கி உள்ளோம். 50 சதவீதம் காமெடி 50 சதவீதம் ஆக்‌ஷன் என இரண்டும் கலந்த கலவையாக கத்தி சண்டை இருக்கும். இதுவரை ஆக்‌ஷன் கதைகளில் நடித்துவந்த விஷால் இந்த படத்தில் காமெடியிலும், ஆக்‌ஷனிலும், சென்டிமென்ட் காட்சிகளிலும் கலக்கி இருக்கிறார்.

குறிப்பாக வடிவேலும், சூரியும் காமெடியில் பின்னி இருக்கிறார்கள். 'தலைநகரம்', 'மருதமலை' படங்களுக்கு பிறகு வடிவேலுவும் நானும் இந்த படத்தில் இணைந்து இருக்கிறோம். அதனால் மக்களிடையே படத்திற்கான எதிர்பார்ப்பைக் காண முடிகிறது.

இசையமைப்பாளர் ஹிப் ஹாப் தமிழா ரசிகர்களின் பல்ஸ் தெரிந்தவர். இந்த படத்தின் ஐந்து பாடல்களையும் சிறப்பாக அமைத்துள்ளார். 'படிக்காதவன்' படத்திற்கு பிறகு தமன்னாவும் நானும் இந்த படத்தில் இணைந்து பணியாற்றி உள்ளோம். அவரும் சிறப்பான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

‘திரிஷா இல்லனா நயன்தாரா’ வெற்றிப்படத்தை தொடர்ந்து ‘இமைக்கா நொடிகள்’ படத்தை தயாரித்துக் கொண்டிருக்கும் கேமியோ பிலிம்ஸ் சி.ஜெ.ஜெயகுமார் இந்த படத்தை இம்மாதம் வெளியிடுகிறார்” என்றார்.

 


Post your comment





Related News
தளபதி விஜயின் கத்தி ஹிந்தி ரீமேக் ரெடி, படத்தை வாங்கிய முன்னணி இயக்குனர்..!
பா.ரஞ்சித்தை முதன்முதலில் அறிமுகப்படுத்திய தயாரிப்பாளரின் இன்றைய நிலை என்ன தெரியுமா?
சோதனைக்கு நடுவிலும் சாதனை செய்து வெற்றி பெற்ற விஜய்யின் முக்கிய படங்கள்!
கத்தி, மெர்சல் படங்களை தாண்டி ஒரு முக்கியமான விஷயம் விஜய் 62 படத்தில்- முழு விவரம் இதோ
ஸ்ரீதேவி விசயத்தை தள்ளி வச்சிட்டு இத பாருங்க! பலரையும் கவர்ந்த விஜய் ரசிகர்!
தெறிக்கவிடும் தளபதி ரசிகர்கள், திணறும் இணையதளங்கள் - என்ன ஸ்பெஷல் தெரியுமா?
விஜய்யின் திரைப்பயணத்தில் ஏற்பட்ட திருப்பங்கள்- பிறந்தநாள் ஸ்பெஷல்
100வது நாள் கொண்டாட்டத்தில் விஜய்யின் வெற்றி படம்
விஜய் படத்துக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி- ரசிகர்கள் கொண்டாட்டம்
நீங்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்த வடிவேலு வந்துவிட்டார்- ரசிகர்கள் உற்சாகம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions