பிலிம்பேர் விருதுகள் - கத்தி படம் 7 விருதுக்கு பரிந்துரை!

Bookmark and Share

பிலிம்பேர் விருதுகள் - கத்தி படம் 7 விருதுக்கு பரிந்துரை!

இந்தியாவில் தேசிய விருதுக்கு பிறகு சினிமா துறையினருக்கு வழங்கப்படும் ஓர் உயரிய விருது பிலிம்பேர் விருதுகள். ஆண்டுதோறும் பிலிம்பேர் விருதுகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்தாண்டும் பிலிம்பேர் விருதுகள் சிறப்பாக நடைபெற இருக்கிறது.

முன்னதாக இந்தாண்டு விருதுக்கு தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் இருந்து படங்கள் பரிந்துரைக்கப்பட்டு வருகின்றன. அதிலும் வழக்கத்தை விட இந்தாண்டு தமிழ் படங்களுக்கு அதிகளவில் பரிந்துரை செய்யப்பட்டு வருகின்றன. இதில் கத்தி படம் மட்டும் 7 விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

துப்பாக்கி படத்தி்ன் மாபெரும் வெற்றிக்கு பின்னர் விஜய்-முருகதாஸ் கூட்டணி மீண்டும் இணைந்த படம் கத்தி. இரண்டு வேடங்களில் விஜய் நடித்திருந்தார். விஜய் ஜோடியாக சமந்தா நடித்திருந்தார். விவசாயிகள் தற்கொலை, தண்ணீர் பிரச்னை போன்ற விஷயங்களை பேசிய இப்படம் ரூ.100 கோடி வசூலிலும் இணைந்தது.

இந்தாண்டு பிலிம்பேர் விருதில் கத்தி 7 விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த இயக்குநர், சிறந்த இசையமைப்பாளர், சிறந்த படம், சிறந்த பாடலாசிரியர் மற்றும் சிறந்த பாடகர் ஆகிய 7 பிரிவுகளில் கத்தி போட்டியிடுகிறது.

இதில் எத்தனை விருதுகள் கத்தி படத்திற்கு கிடைக்க போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions