கத்தி படத்தின் கதை விவகாரம்: விஜய் மீதான வழக்கு 15–ந்தேதிக்கு விசாரணை ஒத்திவைப்பு

Bookmark and Share

கத்தி படத்தின் கதை விவகாரம்: விஜய் மீதான வழக்கு 15–ந்தேதிக்கு விசாரணை ஒத்திவைப்பு

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த கத்தி திரைப்படம் கடந்த ஆண்டு வெளியானது. இந்த திரைப்படத்தின் கதை, தான் இயக்கிய தாகபூமி என்ற குறும்படத்தின் கதை என்றும், தன்னுடைய கதையை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் திருடிவிட்டதாகவும், அதற்கு நஷ்ட ஈடுகோரியும், வேறு எந்த மொழியிலும் கத்தி திரைப்படத்தை மொழியாக்கம் செய்ய தடை விதிக்க வேண்டும் என்றும் திருக்காட்டுப்பள்ளியை அடுத்த இளங்காடு கிராமம் கீழத்தெருவை சேர்ந்த அன்பு.ராஜசேகர்(வயது32) என்பவர் தஞ்சை மாவட்ட செசன்சு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், நடிகர் விஜய், தயாரிப்பாளர்கள் கருணாகரன், சுபாஷ்கரன், ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் வில்லியம் ஆகிய 5 பேர் மீதும் குற்றம் சாட்டப்பட்டது.

இந்த நிலையில் இந்த வழக்கு தஞ்சை மாவட்ட செசன்சு நீதிபதி முகமது அலி முன்பு விசாரணைக்கு வந்தது. இதையடுத்து இந்த வழக்கின் விசாரணையை அடுத்த மாதம்(ஏப்ரல்) 15–ந் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி முகமது அலி உத்தரவிட்டார். 


Post your comment





Related News
விஜய்யின் கத்தியை முந்திய அஜீத்தின் வீரம்: எங்கே, எப்படி தெரியுமா?
கத்தி ஹிந்தி ரீமேக்கில் அக்சய் குமார்?
கத்தியுடன் இணையும் விஜய் 60!
கத்தி படத்தின் ஹிந்தி ரீமேக்கில் நடிக்கும் பிரபல நாயகி!
ஒரே நேரத்தில் தெலுங்கு, ஹிந்தியில் ரீமேக் ஆகும் கத்தி!
கத்தி சாதனையை முறியடித்த வேதாளம்!
கத்தி ரீமேக்கில் நடிக்கவேண்டாம்? தெலுங்கு சூப்பர் ஸ்டாருக்கு கிராம மக்கள் கோரிக்கை
பிலிம்பேர் விருதுகள் - கத்தி படம் 7 விருதுக்கு பரிந்துரை!
கத்தி பட வழக்கு ஒத்திவைப்பு
\'கத்தி\' பின்னணி இசை வெளியீடு...








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions