விஜய்யின் கத்தியை முந்திய அஜீத்தின் வீரம்: எங்கே, எப்படி தெரியுமா?

Bookmark and Share

விஜய்யின் கத்தியை முந்திய அஜீத்தின் வீரம்: எங்கே, எப்படி தெரியுமா?

வீரம் படத்தின் தெலுங்கு ரீமேக்கான கட்டமராயுடு ரிலீஸான அன்று மட்டும் ரூ. 55 கோடி வசூல் செய்துள்ளது. 

சிவா இயக்கத்தில் அஜீத் நடித்த வீரம் படம் தெலுங்கில் கட்டமராயுடு என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. 

அஜீத் கதாபாத்திரத்தில் பவர் ஸ்டார் பவன் கல்யாணும், தமன்னா கதாபாத்திரத்தில் ஸ்ருதி ஹாஸனும் நடித்தனர். படம் கடந்த வெள்ளிக்கிழமை பிரமாண்டமாக ரிலீஸ் ஆனது.

பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே வெளியான கட்டமராயுடு படம் ரிலீஸான அன்று மட்டும் ரூ. 55 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. பவனின் நடிப்பை ரசிகர்கள் பாராட்டியுள்ளனர்.

விஜய்யின் கத்தி படம் தெலுங்கில் சிரஞ்சீவியை வைத்து கைதி எண் 150 என்ற பெயரில் ரீமேக் செய்து வெளியிடப்பட்டது. கைதி எண் 150 படம் ரிலீஸான அன்று ரூ.47 கோடி வசூலித்தது.

கட்டமராயுடு முதல் நாள் வசூல் மூலம் தனது அண்ணன் பட வசூலை முந்தியுள்ளார் தம்பி பவன் கல்யாண். படம் 1,500 திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. அமெரிக்காவில் 250 திரையரங்குகளில் வெளியான கட்டமராயுடு முதல் நாள் மட்டும் ரூ. 4.4 கோடி வசூலித்துள்ளது.

அஜீத் பட ரீமேக் என்பதால் கட்டமராயுடு தமிழ்நாட்டில் 100க்கும் மேற்பட்ட திரையங்குகளில் வெளியிடப்பட்டது. ஒரு தெலுங்கு படம் தமிழகத்தில் அதிக திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.


Post your comment





Related News
கத்தி ஹிந்தி ரீமேக்கில் அக்சய் குமார்?
கத்தியுடன் இணையும் விஜய் 60!
கத்தி படத்தின் ஹிந்தி ரீமேக்கில் நடிக்கும் பிரபல நாயகி!
ஒரே நேரத்தில் தெலுங்கு, ஹிந்தியில் ரீமேக் ஆகும் கத்தி!
கத்தி சாதனையை முறியடித்த வேதாளம்!
கத்தி ரீமேக்கில் நடிக்கவேண்டாம்? தெலுங்கு சூப்பர் ஸ்டாருக்கு கிராம மக்கள் கோரிக்கை
பிலிம்பேர் விருதுகள் - கத்தி படம் 7 விருதுக்கு பரிந்துரை!
கத்தி பட வழக்கு ஒத்திவைப்பு
கத்தி படத்தின் கதை விவகாரம்: விஜய் மீதான வழக்கு 15–ந்தேதிக்கு விசாரணை ஒத்திவைப்பு
\'கத்தி\' பின்னணி இசை வெளியீடு...








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions