'கத்தி' வசூலை 'என்னை அறிந்தால்' ஓவர் டேக் செய்யுமா...?

Bookmark and Share

'கத்தி' வசூலை 'என்னை அறிந்தால்'  ஓவர் டேக் செய்யுமா...?

அஜித் நடித்த 'என்னை அறிந்தால்' படம் வெளிவந்து ஒரு வாரம் ஆகி விட்டது. இரண்டாவது வாரத்தில் வெற்றிகரமாக அடியெடுத்து வைத்தாலும் 'அனேகன்' படத்தின் வரவு, 'என்னை அறிந்தால்' படத்திற்கு கொஞ்சமாவது பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும்.

அப்படியே பாதிப்பை ஏற்படுத்தியிருந்தாலும் 'அனேகன்' படத்தின் வசூலுடன் 'என்னை அறிந்தால்' படத்தின் வசூலை யாரும் ஒப்பிட்டுப் பார்க்க மாட்டார்கள். விஜய், அஜித் ரசிகர்களைப் பொறுத்தவரையில் போட்டி என்பது 'கத்தி'க்கும், 'என்னை அறிந்தால்' படத்திற்கும்தான்.

'கத்தி' படம் முதல் வார முடிவில் சுமார் 70 கோடி ரூபாய் அளவிற்கு வசூலித்ததாகச் சொன்னார்கள். ஆனால், 'என்னை அறிந்தால்' படம் சுமார் 50 கோடி அளவில் மட்டுமே வசூலித்திருக்கிறது என்றும் அதிகாரபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதே போல முதல் நாள் வசூலிலும் 'கத்தி' படம்  தமிழ்நாட்டில் 12 கோடி ரூபாயும் 'என்னை அறிந்தால்' படம் 10 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்துள்ளதாகவும் சொல்கிறார்கள்.

அஜித் படத்தைப் பொறுத்தவரையில் எப்போதுமே முதல் நாளில் பிரமாதமான வசூலும், அடுத்தடுத்த நாட்களில் குறைவான வசூலும் இருப்பதுமாகத்தான் இருக்கும் என்கிறார்கள்.

இதே பொங்கல் தினத்தன்று 'என்னை அறிந்தால்' படம் வெளிவந்திருந்தால் 'கத்தி' படத்தின் வசூலைக் கண்டிப்பாக முறியடித்திருக்கும். ஆனால், சாதாரண ஒரு நாளில் வந்ததால் 'கத்தி' படத்தின் வசூலை முறியடிப்பது என்பது சந்தேகம்தான் என திரையரங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


Post your comment





Related News
என்னை அறிந்தால் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானாம், வெளிவந்த உண்மை தகவல்
விக்டர் ஓகே, பணத்திற்காக இதை செய்யமாட்டேன்: அருண் விஜய் காட்டம்
3வது வருடத்தில் என்னை அறிந்தால்- படத்தின் முழு வசூல் உங்களுக்கு தெரியுமா?
அஜித் மகளின் புதிய லுக், பாத்தா அசந்திடுவீங்க- புகைப்படம் உள்ளே
மீண்டும் இணைகிறது என்னை அறிந்தால் கூட்டணி!
தன் அடுத்தப்படத்தில் முதன் முறையாக வேறு ஒரு ரிஸ்க் எடுக்கும் அருண் விஜய்
தடைகளை தகர்த்து முதல் ஆளாக களமிறங்கும் ‘தல’ அஜித்!
அஜித்தின் என்னை அறிந்தால் படம் கன்னடத்தில் எத்தனை திரையரங்குகளில் வெளியாகிறது தெரியுமா?
கேலி, கிண்டல் செய்தவர்களையும் திரும்பிபார்க்கவைத்த அஜித்! என்ன தெரியுமா
`என்னை அறிந்தால்' படத்திற்கு பிறகு ரசிகர்களை மீண்டும் திருப்திபடுத்துவார் அருண் விஜய்: அறிவழகன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions