காத்திருப்போர் பட்டியல்: ஒரே நாளில் ஒரே இடத்தில் நடக்கும் கதை

Bookmark and Share

காத்திருப்போர் பட்டியல்: ஒரே நாளில் ஒரே இடத்தில் நடக்கும் கதை

பரத் நடித்த யுவன் யுவதி படத்தை தயாரித்த பைஜா டாமின் தயாரிப்பில் உருவாகி வரும் படம் காத்திருப்போர் பட்டியல். சென்னையில் ஒரு நாள் படத்தில் நடித்த சச்சின் ஹீரோ, அட்டகத்தி நந்திதா ஹீரோயின், முண்டாசுப்பட்டி, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் சதுரங்க வேட்டை படங்களுக்கு இசை அமைத்த ஷால் ரோல்டன் இசைய மைக்கிறார்.

மரியான் படத்தை இயக்கிய பரத்பாலாவின் உதவியாளர் டி.ராஜசேகர் இயக்குகிறார். சென்னையில் முதல் கட்ட படப்பிடிப்பும், காஞ்சிபுரத்தில் 2ம் கட்ட படிப்பிடிப்பும் முடிந்து தற்போது இறுதிகட்ட படப்பிடிப்புகள் பாண்டிச்சேரியில் நடந்து வருகிறது.

காத்திருப்போர் பட்டியலின் கதை பற்றி இயக்குனா டி.ராஜசேகர் கூறியதாவது: காதலுக்காக, வேலை வாய்ப்புக்காக, திருமணத்திற்க்காக, அரசியல் பதவிக்காக, கல்லூரி சீட்டுக்காக, பேருந்தில் இடம் பிடிப்பதற்காக என நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளும் ஒரு காத்திருப்பு பட்டியலில் காத்திருப்பவர்கள்தான்.

அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கும் நிகழ்வுகளையும், காத்திருக்கும் தருணங்களையும் அடிப்படையாக கொண்டு திரைக்கதை வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரு புதிய கதை களத்தில் பல்வேறு காரணங்களுக்காக காத்திருப்பவர்களை பற்றி கூறும் கதை தான் இந்த காத்திருப்போர் பட்டியல்.

இது ஒரே நாளில் ஒரே இடத்தில் பல தரபட்ட மனிதர்களுடன் நடைபெறும் சுவாரஸ்யமான காதல் கதை. என்றார் இயக்குனர் ராஜசேகர்.

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions