புலி உடன் கத்துக்குட்டி!

Bookmark and Share

புலி உடன் கத்துக்குட்டி!

நரேன் - சூரி நடிப்பில் இரா.சரவணன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'கத்துக்குட்டி' திரைப்படம், வருகிற அக்டோபர் முதல் தேதி திரைக்கு வரவிருக்கிறது. விஜய் நடித்த புலி படமும் அதேதேதியில் வரவிருக்கிறது.

பெரியநடிகரின் படம் வருகிற நாளன்று இப்படத்தை வெளியிடுவதை குறித்து தயாரிப்பாளர்கள், “படத்தில் எந்த இடத்திலும் 'கட்' கொடுக்காமல் 'யு' சான்றிதழ் வழங்கி இருக்கும் தணிக்கை அதிகாரிகள், ''தஞ்சை மண்ணிலேயே வாழ்ந்த மாதிரியான மனநிலையை இயக்குநர் சரவணன் ஏற்படுத்திவிட்டார்" என மனமாரப் பாராட்டி இருக்கிறார்கள்.

தமிழக அரசின் வரிவிலக்கு குழு, படம் பார்த்த இரண்டாவது நாளே வரிவிலக்கு வழங்கி படக்குழுவைப் பாராட்டி இருக்கிறது. ''நூறு சதவிகித காமெடிப் படமாக 'கத்துக்குட்டி' உருவாகி இருந்தாலும், இன்றைய இளைய தலைமுறைக்கான மிக அவசியமான கருத்தையும் படத்தில் ஸ்ட்ராங்காக வலியுறுத்தி இருக்கிறோம். அதனால், படம் காந்தி ஜெயந்தியை ஒட்டி வெளிவந்தால் நன்றாக இருக்கும் எனத் திட்டமிட்டோம். 

நல்ல விஷயம் காந்தி ஜெயந்தியை ஒட்டி ரசிகர்களைச் சென்றடைந்தால் சிறப்பாக இருக்கும் என்பதே எங்கள் நோக்கம்" என்கிறார்கள் தயாரிப்பாளர்கள் மூவரும்.  அக்டோபர் முதல் தேதி தமிழகம் முழுக்க 240 திரை அரங்குகளில் 'கத்துக்குட்டி' வெளியாக உள்ளது.


Post your comment





Related News
வெள்ளநிவாரணநிதிக்குத் திருமணச் செலவை தருவோம்- புதுமணப்பெண் சந்தியா
நடிகை சந்தியாவுக்கு நல்லபடியாக திருமணம் நடந்தது
மீத்தேனுக்கு எதிரான 'கத்துக்குட்டி' படம்! தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் பாராட்டு!
டெல்லி தமிழ்ச் சங்கம் பாராட்டை பெற்றது 'கத்துக்குட்டி'!
மீத்தேன் திட்டத்துக்கு அனுமதி மறுத்த தமிழக அரசுக்கு 'கத்துக்குட்டி' படக்குழு நன்றி!
'கத்துக்குட்டி' படத்தை கொண்டாடும் நடிகர்கள் சிவகார்த்திகேயன், விமல், சூரி,இயக்குநர் பொன்ராம்
கத்துக்குட்டி அக்.9-ம் தேதி ரிலீஸ்: உயர் நீதிமன்றத்தில் தடை நீங்கியது
‘கத்துக்குட்டி’ வெல்லும்! வைகோ அறிக்கை
“ஹயாத் ஹோட்டலில் கத்துக்குட்டி!”








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions