விவசாயத்திற்காக கத்தும் புலிக்குட்டி- கத்துக்குட்டி

Bookmark and Share

விவசாயத்திற்காக கத்தும் புலிக்குட்டி- கத்துக்குட்டி

கத்துக்குட்டி திரைப்படம் சென்ற வாரமே வெளிவர வேண்டிய படம். ஒரு வாரம் தாமதமாக வெளிவந்ததால் ஒரு பெரிய வெற்றியை ருசி பார்க்க தவறிவிட்டது. சமூக அக்கறையுடன் மட்டும் படம் எடுத்து, திரையரங்கிற்கு வருபர்களுக்கு சோகத்தை திணித்து கசக்கி பிழியாமல் காமெடிகளை திணித்து அழகாக கதை சொல்லியுள்ளார் இயக்குனர் இரா.சரவணன்.

தமிழ்சினிமாவை வைத்து தான் தமிழகத்தில் முதல்வர்களே உருவாகின்றார்கள். தமிழக மக்கள் வாழ்வில் தமிழ்சினிமா இப்படி ரத்தத்துடன் கலந்து உள்ளது. இப்படிப்பட்ட மக்களின் பணத்தை மட்டும் குறி வைத்து படம் எடுக்க நினைப்பவர்களுக்கு மத்தியில், இப்படியும் வித்தியாசமாக கதை சொல்லும் இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் அதிகம் வரவேண்டும்.

ஒரு படம் எப்படி உலகத்தரம் வாய்ந்ததாக இருக்க வேண்டும் என்று விரும்புகின்றோமோ? அதேபோல் மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டும் படங்களும் அதே அளவில் வெளிவரவேண்டும்.அபபடிப்பட்ட படம்தான் கத்துக்குட்டி.

இந்த தலைமுறைகள் பார்க்கவேண்டிய படம் இது. தஞ்சையில் நடந்துவரும் மீத்தேன் திட்டத்தையும், விவசாயியின் பட்டினி சாவு என்பது என்ன? என்பதை பற்றியும் கூறியுள்ள படம் தான் இந்த கத்துக்குட்டி. சாதாரண மக்களுக்கும் மீத்தேன் திட்டத்தால் ஏற்படும் பாதிப்புகளை புரியும் படி படத்தில் காட்டியுள்ளனர்.

மேலும் விவசாயிகள் பட்டினி சாவு என்றால் என்ன? என இதுவரை அறியாமல் இருந்த இளைஞர்கள் கூட இனி விவசாயிகளின் பிரச்சனையை உன்னிப்பாக கவனிக்கவைத்துள்ளது. இளைஞர்களுக்கு அரசியலில் வாய்ப்பளித்தும், அவர்களுக்கும் அரசியலை சுயநலமாக்குவது தவறு என சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதில் நடித்துள்ள அனைவருமே தங்கள் பணிகளை சிறப்பாக செய்துள்ளனர். படத்தில் உள்ள நிறைகளால், குறைகளை தேட மனம் முயலவில்லை. தேல்விகளால் நெருக்கடியில் இருந்த நரேனுக்கு கத்துக்குட்டி படம் அடுத்த மைல்கல். மேலும் தமிழில் சரியான கதாபாத்திரங்கள் அமையாமல் தடுமாறிவந்த சிருஷ்டி டாங்கேவுக்கும் சிறப்பான கதாபாத்திரம் அமைந்துள்ளது.

மேலும், நீண்ட நாட்களுக்கு பிறகு சூரியின் காமெடிகள் நம்மை சிரிக்கவைக்கின்றன. படத்தின் கிளைமேக்ஸ் கத்தி, அரிவாள், போராட்டம் என முடிக்காமல் எதிர்பாராத இடத்தில் முடித்ததும் சிறப்பு..!


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions