தலைமுடிக்கு சாயம் பூச 55 லட்சம் செலவு செய்து தயாரிப்பாளரை தலைசுற்ற வைத்த கத்ரீனா

Bookmark and Share

தலைமுடிக்கு சாயம் பூச 55 லட்சம் செலவு செய்து தயாரிப்பாளரை தலைசுற்ற வைத்த கத்ரீனா

இந்தியில் முன்னணி நடிகையாக வலம் வரும் கத்ரீனா கைப் தற்போது அபிஷேக் கபூர் இயக்கத்தில் ஆதித்யா ராய் கபூர், ஜோடியாக ‘ஃபித்தூர்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை யுடிவி மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் தபுவும் நடித்துள்ளார்.

அடுத்த மாதம் இப்படம் ரிலீசாக உள்ளது. இந்த படத்தில் கத்ரீனா சிவப்பு நிறத்திலான தலைமுடியோடு நடித்துள்ளாராம். இதற்காக முடியை சிவப்பு நிறமாக்கும் நிபுணர்களை தேடி வந்த கத்ரீனாவுக்கு மும்பையில் அதற்கான நிபுணர்கள் இல்லாத நிலையில், லண்டனுக்கு பயணம் செய்து தனது தலைமுடியின் நிறத்தை மாற்றியுள்ளார். 

இதற்காக லண்டனுக்கு ஒவ்வொரு முறையும் தயாரிப்பாளர் செலவில் பிசினஸ் கிளாஸ் டிக்கெட்டில் பயணம் செய்துள்ளார். அங்கு ஒவ்வொரு முறையும் ஐந்து நட்சத்திர ஓட்டலில் தங்கியுள்ளார்.

மேலும், இவர் ஒவ்வொரு முறை செல்லும்போதும் தன்னுடைய மேனேஜரையும் கூடவே அழைத்துச் சென்றுள்ளார். இதற்கான செலவையும் தயாரிப்பாளர் தரப்பே செய்துள்ளது. 

இப்படியாக அவருடைய தலைமுடியை சிவப்பு நிறத்துக்கு மாற்றுவதற்கு மட்டும் கணக்கிட்டு பார்த்தால் ரூ.55 லட்சம் செலவாகியுள்ளதாம். இந்த பில்லை பார்த்ததும் தயாரிப்பாளரே அதிர்ச்சியில் உறைந்து போய்விட்டாராம்.

 


Post your comment





Related News
நடிகை கத்ரீனா கைப்பின் அம்மா இப்படி ஒரு வேலை செய்கிறாரா? அதுவும் தமிழ்நாட்டில்?
மாஸ் காட்டும் சல்மான் கான், இத்தனை கோடிகள் வசூலா!
கத்ரீனாவை முத்தமிட மறுத்த சல்மான்கான்
இந்த காதலையும் அத்துவிட வந்துட்டாளே: பிரபல நடிகை மீது தீபிகா கோபம்
ஓரங்கட்டி அப்பா வயது நடிகருக்கு லிப் டூ லிப் கொடுத்த நடிகை: கையும், களவுமாக பிடித்த சூப்பர்ஸ்டார்
பார்ரா..மீண்டும் சல்மானிடமேவா?: கத்ரீனாவின் சமத்தை பார்த்து வியக்கும் பாலிவுட்
ஒரே படத்தில் 29 பாடல்கள்! ஷாக் கொடுத்த பாலிவுட் இயக்குனர்
திருமண கற்பழிப்புகள் பற்றி பெண்கள் பேச வேண்டும்: கத்ரீனா கைப்
நடிகை கத்ரீனாவை ஏற்றாமல் சென்ற ஏர் இந்தியா விமானம்!
காதல் என்பது அவர்களுடைய தனிப்பட்ட விஷயம் :கத்ரீனா கைப்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions