சென்னை மக்களை நினைத்து வருந்தும் கத்ரீனா கைப்

Bookmark and Share

சென்னை மக்களை நினைத்து வருந்தும் கத்ரீனா கைப்

மழை வெள்ளம் இந்தியாவை மட்டுமல்ல, உலகையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது.

வசதி உள்ளவர்கள் இல்லாதவர்கள் என்ற பாகுபாடு இல்லாமல், அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வெள்ளம் புகுந்த பகுதிகளில் மட்டுமல்ல, மின்சாரம் இல்லை, பால் தட்டுப்பாடு, குடிநீர் கிடைக்காத சோகம் என்று சென்னை நகரின் அனைத்துப் பகுதிகளில் இருப்பவர்களும் ஏதாவது ஒரு வகையில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ் நடிகர்கள் – நடிகைகள் மட்டுமல்ல தெலுங்கு, மலையாள நடிகர் – நடிகைகளும் அனுதாபம் தெரிவிப்பதோடு நிறுத்தாமல், பல்வேறு உதவிகளையும் செய்து வருகிறார்கள். பாலிவுட் நட்சத்திரங்களையும் சென்னை வெள்ளம் பரிதாபப்பட வைத்துள்ளது.

அமிதாப்பச்சன் உள்பட பலர் தங்கள் வேதனையை டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். பிரபல இயக்குனர் ராம்கோபால் வர்மா தமிழ்நாட்டைச் சேர்ந்த நடிகர்கள் குறைந்த அளவு நிதி கொடுத்து இருப்பதை குறை கூறியுள்ளார்.

இந்தி நடிகை கத்ரீனா கைப் சென்னை வெள்ளம் குறித்து நிருபர்களிடம் கூறும்போது....

‘‘வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை மக்களை நினைத்து வருத்தப்படுகிறேன். எனது தாயும் பாதிக்கப்பட்ட பகுதிக்கு மிக அருகில் வசிக்கிறார். இதுபற்றி அங்கிருந்து போன் வந்ததில் இருந்து கவலையாக இருக்கிறது.

இயற்கை சீற்றத்தை எதுவும் செய்ய முடியாது. அது துரதிருஷ்டவசமானது. இந்த சேதம் எதிர்பாராதது. மக்கள் தங்களால் முடிந்த அளவு நிவாரண உதவிகளை வழங்க வேண்டும்’’ என்றார்.


Post your comment





Related News
நடிகை கத்ரீனா கைப்பின் அம்மா இப்படி ஒரு வேலை செய்கிறாரா? அதுவும் தமிழ்நாட்டில்?
மாஸ் காட்டும் சல்மான் கான், இத்தனை கோடிகள் வசூலா!
கத்ரீனாவை முத்தமிட மறுத்த சல்மான்கான்
ஐயோ அந்த நடிகையுடன் முத்த காட்சியா? அலறி அடித்து ஓடிய பிரபல நடிகர்.!
இந்த காதலையும் அத்துவிட வந்துட்டாளே: பிரபல நடிகை மீது தீபிகா கோபம்
சல்மான்கானிடம் மீண்டும் காதலில் விழுந்த கத்ரீனாகைப்
ஓரங்கட்டி அப்பா வயது நடிகருக்கு லிப் டூ லிப் கொடுத்த நடிகை: கையும், களவுமாக பிடித்த சூப்பர்ஸ்டார்
பார்ரா..மீண்டும் சல்மானிடமேவா?: கத்ரீனாவின் சமத்தை பார்த்து வியக்கும் பாலிவுட்
ஒரே படத்தில் 29 பாடல்கள்! ஷாக் கொடுத்த பாலிவுட் இயக்குனர்
திருமண கற்பழிப்புகள் பற்றி பெண்கள் பேச வேண்டும்: கத்ரீனா கைப்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions