திருமண கற்பழிப்புகள் பற்றி பெண்கள் பேச வேண்டும்: கத்ரீனா கைப்

Bookmark and Share

திருமண கற்பழிப்புகள் பற்றி பெண்கள் பேச வேண்டும்: கத்ரீனா கைப்

மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் இந்தி நடிகை கத்ரீனா கைப் கலந்து கொண்டு பேசியதாவது:-

வன்முறைகளை பெண்கள் அமைதியாக சந்திக்க கூடாது. திருமண கற்பழிப்பு உள்ளிட்ட பெண்களுக்கு எதிரான குற்றச்செயல்கள் குறித்து பெண்கள் கட்டாயம் பேச வேண்டும். சில சமயங்களில், படித்த பெண்கள் கூட சமுதாய நெறிகள் காரணமாக உயிர் இழக்க நேரிடுகிறது.

திருமண கற்பழிப்பை குற்றம் என அங்கீகரிக்க பெரும்பாலான சமுதாயம் தவறுகிறது. இதுபற்றி ஏராளமான பெண்கள் பேச வேண்டும். பெண்கள் தங்களை தாழ்வாகவும், பலவீனமாகவும் கருதுவது சரி அல்ல. ஏனென்றால், நாம் பலவீனமான பாலினம் இல்லை.

இந்த உலகம் பெரும்பாலும் ஆணாதிக்க சமூகத்தால் கட்டுப்படுத்தப்பட்டது. இத்தனை ஆண்டுகளும், வன்முறைகளை எதிர்கொண்ட பெண்கள், அதனை வெளிப்படையாக பேசாமல் மவுனம் காத்தனர். மாநிலங்களில் பெண் முதல்-மந்திரிகளை கொண்ட ஒரு நாட்டில், பாலின வேறுபாடு நிகழ்வது வருத்தம் அளிக்கிறது.

பெண்களுக்கு எதிரான வன்முறை குற்றங்களை கொண்ட அதிர்ச்சியூட்டும் சம்பவங்கள் தினசரி அடிப்படையில் வந்த வண்ணம் இருக்கின்றன. இருந்தாலும், இந்தியாவில் பெண்களுக்கு எதிரான பிற குற்றங்கள் வெளிச்சத்துக்கு வராமல் இருப்பதை நான் கற்பனை செய்து பார்க்கிறேன்.

இவ்வாறு கத்ரீனா கைப் தெரிவித்தார். 


Post your comment





Related News
இந்த காதலையும் அத்துவிட வந்துட்டாளே: பிரபல நடிகை மீது தீபிகா கோபம்
சல்மான்கானிடம் மீண்டும் காதலில் விழுந்த கத்ரீனாகைப்
ஓரங்கட்டி அப்பா வயது நடிகருக்கு லிப் டூ லிப் கொடுத்த நடிகை: கையும், களவுமாக பிடித்த சூப்பர்ஸ்டார்
பார்ரா..மீண்டும் சல்மானிடமேவா?: கத்ரீனாவின் சமத்தை பார்த்து வியக்கும் பாலிவுட்
ஒரே படத்தில் 29 பாடல்கள்! ஷாக் கொடுத்த பாலிவுட் இயக்குனர்
நடிகை கத்ரீனாவை ஏற்றாமல் சென்ற ஏர் இந்தியா விமானம்!
காதல் என்பது அவர்களுடைய தனிப்பட்ட விஷயம் :கத்ரீனா கைப்
தலைமுடிக்கு சாயம் பூச 55 லட்சம் செலவு செய்து தயாரிப்பாளரை தலைசுற்ற வைத்த கத்ரீனா
சென்னை மக்களை நினைத்து வருந்தும் கத்ரீனா கைப்
சல்மான் கானுடன் ஜோடி சேர மறுத்த கத்ரீனா கைப்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions