
டிவிட்டரில் நேற்று புதுப் பஞ்சாயத்தைக் கூட்டி விட்டனர் குசும்புக்காரர்கள். ‘காத்ரீனா கைப்' காணவில்லை என்று ஹேஷ்டேக் போட்டு அது டிரெண்ட் ஆகி பரபரப்பையும் கிளப்பி விட்டு விட்டது.
இதை காத்ரீனாவிடமே கேட்டோது அவர் வெறுமனே சிரித்து வைத்தார். #KatrinaMissing வார்த்தை திங்கள்கிழமை காலை முதல் டிவிட்டரில் டிரண்டிங் ஆகியிருந்தது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த ஹேஷ்டேகில் பலரும் காத்ரீனாவுக்கு என்னாச்சு என்று விசாரிக்க ஆரம்பித்து விட்டனர். அவருக்கு என்னவாயிற்று, எங்கு போனார் என்பது கேள்விக்குறியானது. அவர் லோரியல் பாரீஸ் பெமீனா மகளிர் விருது விழாவுக்குப் போயிருப்பதாக தகவல் பரவியது.
மேலும் இந்த டிவிட்டர் டிரண்ட் குறித்து அவரது காதுகளுக்கு செய்தி போனதாகவும், அதைக் கேட்டு அவர் சிரித்ததாகவும் தகவல்கள் வெளியாகின.தான் டிவிட்டரில் இல்லை என்பதால் இதுகுறித்து தனக்குத் தெரியவில்லை என்று காத்ரீனா கூறினாராம்.
அதேசமயம், அவர் பித்தூர் என்ற படத்தின் ஷூட்டிங்கில் காத்ரீனா பிசியாக இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகின.ஏற்கனவே ராகுல் காந்தி எங்கே என்று பெரும் பரபரப்பைக் கிளப்பி ஓய்ந்தார்கள்.
அதேபோல விலாடிமிர் புதினைக் காணவில்லை என்று ஒரு பரபரப்பு கிளம்பியது. யோயோ ஹனிசிங்கையும் காணவில்லை என்று பரபரப்பு கிளம்பியது.இந்த வரிசையில் தற்போது காத்ரீனாவையும் காணவில்லை என்று டிவிட்டரில் புயலைக் கிளப்பி விட்டு விட்டனர்.
முன்பு போல இப்போது இல்லை. டிவிட்டர், ஃபேஸ்புக் என சமூக வலைத்தளத்திலேயே குடித்தனம் நடத்தி வருகிறார்கள் பெரும்பாலான மக்கள்.இவங்க கையில் ஏதாவது ஒரு விஷயம் கிடைத்து விட்டால் அடுத்த சில விநாடிகளில் அது காட்டுத் தீயாக பரவி விடுகிறது.
அப்புறம் சம்பந்தப்பட்ட நபர்களே வந்து ஐயோ சாமி ஆளை விடுங்கடா என்று சொல்லும் வரைக்கும் விடவே மாட்டார்கள்.
Post your comment