மெழுகுச் சிலை அழகா இல்லை கத்ரீனா கைப் அழகா?: நீங்களே சொல்லுங்க!

Bookmark and Share

மெழுகுச் சிலை அழகா இல்லை கத்ரீனா கைப் அழகா?: நீங்களே சொல்லுங்க!

பாலிவுட் நடிகை கத்ரீனா கைபின் மெழுகுச் சிலை லண்டனில் உள்ள மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள மேடம் டுசாட்ஸ் மெழுகுச்சிலை அருங்காட்சியகத்தில் பல பிரபலங்களின் மெழுகுச் சிலைகள் உள்ளன.

இந்நிலையில் பாலிவுட் நடிகைககளில் கத்ரீனா கைப், தீபிகா படுகோனே, பிரியங்கா சோப்ரா ஆகிய மூவரில் யாருக்கு மெழுகுச் சிலை வைக்கலாம் என்று மேடம் டுசாட்ஸ் இணையதளம் மூலம் மக்களிடம் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

அந்த வாக்கெடுப்பில் கத்ரீனா கைபுக்கு சிலை வைக்கவே பலரும் விருப்பம் தெரிவித்து வாக்களித்தனர்.கத்ரீனா கைப் நடனமாடும் போஸில் இருக்கும் மெழுகுச் சிலை செய்யப்பட்டு மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டது.

தன்னுடையை மெழுகுச் சிலையை கத்ரீனா கைப் கடந்த 28ம் தேதி திறந்து வைத்து மகிழ்ச்சி அடைந்தார்.என்னை விட பெரிய நட்சத்திரமாகிவிட்டீர்கள் என்று கத்ரீனா கைபுக்கு அவரின் முன்னாள் காதலரான சல்மான் கான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் ஏற்கனவே பாலிவுட் நட்சத்திரங்களான அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய், ஷாருக்கான், சல்மான் கான், ரித்திக் ரோஷன், கரீனா கபூர் மற்றும் மாதுரி தீக்சித் ஆகியோரின் மெழுகுச் சிலைகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

மெழுகுச் சிலையை விட கத்ரீனா கைப் தான் அழகாக இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.


Post your comment





Related News
நடிகை கத்ரீனா கைப்பின் அம்மா இப்படி ஒரு வேலை செய்கிறாரா? அதுவும் தமிழ்நாட்டில்?
மாஸ் காட்டும் சல்மான் கான், இத்தனை கோடிகள் வசூலா!
கத்ரீனாவை முத்தமிட மறுத்த சல்மான்கான்
ஐயோ அந்த நடிகையுடன் முத்த காட்சியா? அலறி அடித்து ஓடிய பிரபல நடிகர்.!
இந்த காதலையும் அத்துவிட வந்துட்டாளே: பிரபல நடிகை மீது தீபிகா கோபம்
சல்மான்கானிடம் மீண்டும் காதலில் விழுந்த கத்ரீனாகைப்
ஓரங்கட்டி அப்பா வயது நடிகருக்கு லிப் டூ லிப் கொடுத்த நடிகை: கையும், களவுமாக பிடித்த சூப்பர்ஸ்டார்
பார்ரா..மீண்டும் சல்மானிடமேவா?: கத்ரீனாவின் சமத்தை பார்த்து வியக்கும் பாலிவுட்
ஒரே படத்தில் 29 பாடல்கள்! ஷாக் கொடுத்த பாலிவுட் இயக்குனர்
திருமண கற்பழிப்புகள் பற்றி பெண்கள் பேச வேண்டும்: கத்ரீனா கைப்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions