டிஜிட்டலில் வீரபாண்டிய கட்டபொம்மன்

Bookmark and Share

டிஜிட்டலில் வீரபாண்டிய கட்டபொம்மன்

இயக்குனர் பி.ஆர்.பந்துலு இயக்கிய வீரபாண்டிய கட்ட பொம்மன் படத்தில் சிவாஜி உட்பட பலரும் நடித்து இருந்தனர். முதன் முதலில் தென்னிந்தியாவில் இருந்து சுதந்திர போராட்டத்துக்காக குரல் கொடுத்த மாவீரன் வீர பாண்டிய கட்டபொம்மன்.

1959–ம் ஆண்டு வெளியான இப்படத்தில் சிவாஜி வீரபாண்டிய கட்ட பொம்மனாக வீர வசனங்கள் பேசி நடித்து உலக அளவில் பாராட்டு பெற்றார். எகிப்து பட விழாவில் சிவாஜிக்கு சிறந்த நடிகர் விருது வழங்கப்பட்டது.

சிறந்த படமாகவும், சிறந்த இசை அமைப்பாளர் விருதும் கிடைத்தது. தமிழகத்தில் வெளியான அதே நாளில் லண்டனிலும் திரையிடப்பட்டது. அந்தக்காலத்திலேயே போர்க்காட்சிகள் ஆங்கிலப் படங்களுக்கு இணையாக எடுக்கப்பட்டு இருந்தது.  

அதே பெயரில் தெலுங்கிலும் அமர் ஷாகீத் என்ற பெயரில் இந்தியிலும் மொழி மாற்றம் (டப்பிங்) செய்து வெளியிடப்பட்டது.

காலத்தால் அழியாத திரைக்காவியமான இப்படத்தை இந்த தலைமுறையினரும் கண்டு ரசிக்கும் வகையில் 70 எம்.எம். திரைப்படமாக டிஜிட்டல் தொழில் நுட்பத்துடன் வண்ணக் கலரும், டி.டி.எஸ்.ஒலி கலவையுடன் வசனங்களும் இசையும் மாற்றம் பெற்றுள்ளது.தமிழ்நாடு முழுவதும் 100 தியேட்டர்களிலும் ரிலீஸ் ஆகியுள்ளது. 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions