'கட்டமா ராயுடு'... பவன் கல்யாணுடன் மீண்டும் இணையும் ஸ்ருதி ஹாசன்!

Bookmark and Share

'கட்டமா ராயுடு'... பவன் கல்யாணுடன் மீண்டும் இணையும் ஸ்ருதி ஹாசன்!

அஜீத் - தமன்னா நடித்து வெளியான வீரம் படத்தை தெலுங்கில் பவன் கல்யாணை வைத்து ரீமேக் செய்கிறார்கள் அல்லவா...இந்தப் படத்தில் பவன் கல்யாணுக்கு ஜோடியாக ஸ்ருதி ஹாஸன் நடிக்கிறார்.இந்தப் படத்துக்கு கட்டமா ராயுடு என்று தலைப்பிட்டுள்ளனர்.

பெரும் வெற்றி பெற்ற கப்பார் சிங் படத்தைத் தொடர்ந்து பவன் - ஸ்ருதி ஜோடி சேரும் இரண்டாவது படம் இது. வேக வேகமாகப் படமாக்கபட்ட இந்தப் படம், இப்பொழுது முடியும் தருவாயில் உள்ளது. பொள்ளாச்சியைத் தொடர்ந்து இப்பொழுது ஹைதராபாதில் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

பவன் கல்யாணுடன் ஸ்ருதி ஹாசன் நடித்த பாடல் காட்சி பொள்ளாச்சியில் படப்பிடிப்பு நடந்தபோது அங்கு கூடிய மக்கள் எழுப்பிய ஆரவாரம் ஒரு தமிழ்ப் படத்துக்கு இணையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

"வருகின்ற தெலுங்கு வருட பிறப்பு அன்று வெளியாகும் இந்தப் படம் ஸ்ருதி ஹாசனை தென்னிந்திய திரை உலகில் மேலும் உச்சத்தில் உயர்த்தி செல்லும்," என்கிறார் படத்தின் இயக்குநர் கிஷோர் பர்தசானி.


Post your comment





Related News
பிக் பாஸ் கமல்ஹாசன்... விருந்தினர்கள் யார்? யார்?
ஸ்ருதிஹாசனுக்கு பிடிக்காத அந்த வார்த்தை! சொன்னால் என்னாகும் தெரியுமா
கமல்ஹாசன் வழக்கில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
இனி நான் என்ன செய்யப்போகிறேன் தெரியுமா? கமல் ஹாசன்
கமல்ஹாசனின் விஸ்வரூபம் 2 படத்தை பற்றிய சூப்பர் அப்டேட்
கமல் ஹாசனுக்காக இவ்வளவு பெரிய தொகையா? எதற்கு தெரியுமா
சக்தி வாய்ந்த இந்தியர்கள் பட்டியல்! ரஜினி,கமலுக்கு கிடைத்த கெளரவம்
நடிகர்-நடிகைகளின் முகப்பு படங்களை வைத்து அவதூறு பரப்புவதா?: சுருதிஹாசன் கண்டனம்
சல்மான் கான் இடத்தை பிடிக்கிறாரா கமல்ஹாசன்- ஆனால்?
தேசிய விருது சர்ச்சை கருத்துக்கள்- நடிகர் கமல்ஹாசனின் பதில்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions