ஜீவாவின் கவலையை போக்கியதா கவலை வேண்டாம்?

Bookmark and Share

ஜீவாவின் கவலையை போக்கியதா கவலை வேண்டாம்?

ரசிகர்களின் ரசனை என்னவென்று நன்கு ஆராய்ந்து, அவர்களின் எதிர்பார்ப்புக்கு தகுந்தவாறு ஒரு திரைப்படத்தின் கதையை தேர்வு செய்வது தான், ஒரு நல்ல தயாரிப்பாளரின் அடையாளம்.

அப்படி ஒரு தயாரிப்பாளராக தமிழ் திரையுலகில் வலம் வந்து கொண்டிருப்பவர் தான் ‘ஆர் எஸ் இன்போடைன்மெண்ட்’ நிறுவனத்தின் நிறுவனர் எல்ரெட் குமார்.

இவர் முதல் முதலாக தயாரித்த ‘விண்னைத் தாண்டி வருவாயா’ படம் முதல் சமீபத்தில் வெளியான கவலை வேண்டாம் திரைப்படம் வரை, அனைத்துமே ரசிகர்கள் மட்டுமின்றி சினிமா விமர்சகர்கள் மத்தியிலும் அமோக பாராட்டுகளை பெற்றது குறிப்பிடத்தக்கது.

ஜீவா – காஜல் அகர்வால் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் ‘கவலை வேண்டாம்’ திரைப்படம், தற்போது வர்த்தக ரீதியாக நல்லதொரு வெற்றியை தழுவி இருக்கின்றது.

வெளியான முதல் மூன்று நாட்களிலேயே ஆறு கோடியே அறுபது லட்சம் ரூபாய் வசூலை கவலை வேண்டாம் ஈட்டி இருப்பதே அதற்கு சிறந்த உதாரணம்.

“யாமிருக்க பயமே திரைப்படத்தை தொடர்ந்து கவலை வேண்டாம் படத்திலும், தான் ஒரு நகைச்சுவை விரும்பி என்பதை நிரூபித்து இருக்கிறார் இயக்குநர் டீகே. ரசிகர்கள் மத்தியில், குறிப்பாக குடும்ப ரசிகர்கள் மத்தியில் கவலை வேண்டாம் படம் அமோக வரவேற்பை பெற்று வருவது, எங்களுக்கு எல்லையற்ற மகிழ்ச்சியாக இருக்கின்றது.

‘எஸ் எம் எஸ்’, ‘என்றென்றும் புன்னகை’ , ‘கோ 2’ திரைப்படங்களில் இளம் ரசிகர்களின் பாராட்டுகளை அதிகளவில் பெற்ற ஜீவா, தற்போது கவலை வேண்டாம் படத்திலும் அவருடைய பாணியை தொடர்ந்து இருக்கிறார்.

திரையரங்குகளில் ஒலிக்கும் கைத்தட்டல்களுக்கு சான்று, காஜல் அகர்வாலின் அசாத்திய நடிப்பு….லியோன் ஜேம்ஸின் இசையும், ஆர் ஜே பாலாஜியின் டைமிங் காமெடியும் எங்கள் கவலை வேண்டாம் படத்திற்கு அமைந்த இரண்டு மிக பெரிய தூண்கள்.


Post your comment





Related News
TAMIL ROCKERS உரிமையாளரை தொடர்ந்து கவலை வேண்டாம் படத்தை வெளியிட்டவர் கைது!
“500, 1000 கவலையில் தத்தளிக்கும் மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டிய ஒரு விஷயம் – ‘கவலை வேண்டாம்’
கவலை வேண்டாம் படத்தில் ஜீவாவுடன் நடித்தது மகிழ்ச்சியான அனுபவம்: நடிகை சுனைனா
இறுதி கட்ட படபிடிப்பில் ‘கவலை வேண்டாம்’!
இன்று புதிய படத்தின் தலைப்புடன் படப்பிடிப்பை தொடங்கிய ஜீவா
கவலைபட வைத்தவர் ‘கவலைவேண்டாம்’ படத்திலிருந்து நீக்கம்..
ஜீவாவுக்கு இப்போது கவலை வேண்டாம்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions