கவலை வேண்டாம் படத்தில் ஜீவாவுடன் நடித்தது மகிழ்ச்சியான அனுபவம்: நடிகை சுனைனா

Bookmark and Share

கவலை வேண்டாம் படத்தில் ஜீவாவுடன் நடித்தது மகிழ்ச்சியான அனுபவம்: நடிகை சுனைனா

ஜீவா - காஜல் அகர்வால் முதன்முறையாக ஜோடி சேர்ந்துள்ள படம் ‘கவலை வேண்டாம்’.  'யாமிருக்க பயமேன்' புகழ் டீகே இயக்கி இருக்கும் இந்த படத்தை ஆர்.எஸ். இன்போடைன் சார்பில் எல்ரெட் குமார் தயாரித்திருக்கிறார்.

இப்படத்தில் ஜீவாவுடன் இணைந்து முக்கிய வேடத்தில் சுனைனா நடித்திருக்கிறார். இப்படத்தில் நடித்த அனுபவம் குறித்து நடிகை சுனைனா “கவலை வேண்டாம் படத்தில் ஜீவா சாருடன் இணைந்து பணியாற்றியது எனக்கு எல்லையற்ற மகிழ்ச்சியான அனுபவம். தரமான படங்களை வழங்கி வரும் எல்ரெட் குமார் சார் தயாரிக்கும் இந்த படத்தில் நடித்திருப்பது, எனக்கு பெருமை. 

இயக்குனர் டீகே என்னிடம் கதையை கூறும் போதே, இந்த கதாப்பாத்திரத்தில் நடிக்க வேண்டும் என முடிவு செய்துவிட்டேன். ஜீவாவை தீவிரமாக காதலிக்கும் சாதுவான பெண் கதாப்பாத்திரத்தில் நான் ‘கவலை வேண்டாம்‘ படத்தில் நடித்திருக்கிறேன். என்னுடைய கதாப்பாத்திரம் நிச்சயமாக ரசிகர்களின் பாராட்டுகளை பெறும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது” என்றார்.

அக்டோபர் 7-ம் தேதி உலகம் முழுவதும் 'கவலை வேண்டாம்' திரைப்படம் வெளியாகிறது.


Post your comment





Related News
TAMIL ROCKERS உரிமையாளரை தொடர்ந்து கவலை வேண்டாம் படத்தை வெளியிட்டவர் கைது!
ஜீவாவின் கவலையை போக்கியதா கவலை வேண்டாம்?
“500, 1000 கவலையில் தத்தளிக்கும் மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டிய ஒரு விஷயம் – ‘கவலை வேண்டாம்’
இறுதி கட்ட படபிடிப்பில் ‘கவலை வேண்டாம்’!
இன்று புதிய படத்தின் தலைப்புடன் படப்பிடிப்பை தொடங்கிய ஜீவா
கவலைபட வைத்தவர் ‘கவலைவேண்டாம்’ படத்திலிருந்து நீக்கம்..
ஜீவாவுக்கு இப்போது கவலை வேண்டாம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions