அரசியலுக்கு சென்றதால் அம்மா வேடம்கூட கிடைக்கவில்லை: கவிதா வேதனை

Bookmark and Share

அரசியலுக்கு சென்றதால் அம்மா வேடம்கூட கிடைக்கவில்லை: கவிதா வேதனை

பிரபல தெலுங்கு நடிகை கவிதா. சில  தமிழ் படங்களிலும் ஹீரோயினாக நடித்துள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்து அரசியலிலும் குதித்தார்.

"அரசியலில் குதித்ததால் அம்மா வேடம்கூட யாரும் தருவதில்லை" என்று மனம் நொந்து கூறியிருக்கிறார். அவர் மேலும் கூறியிருப்பதாவது:முதல்வர் சந்திரபாபு நாயுடு விரும்பி அழைத்ததால் அரசியலுக்குச் சென்றேன்.

சட்டசபை தேர்தலில் போட்டியிட வைத்து எம்.எல்.ஏ ஆக்குவதாக கூறினார். அவரது பேச்சை நம்பி அரசியலில் குதித்தேன். ஆனால் சந்திரபாபு நாயுடு எனக்கு வாக்களித்தபடி எந்த சட்டமன்ற தேர்தலிலும் போட்டியிட வாய்ப்பளிக்கவில்லை. என்றாலும் தொடர்ந்து அவரது தலைமையின் கீழ்தான் பணியாற்றி வருகிறேன்.

இனியும் பணியாற்றுவேன்.அரசியல் கட்சியில் சேர்ந்ததால் எனது சினிமா வாய்ப்புகள் பறிபோய்விட்டது. அம்மா வேடத்தில் நடிக்ககூட யாரும் வாய்ப்பளிக்கவில்லை. இதனால் நான் பெரும் கவலை அடைந்தேன்.

மன ஆறுதலுக்காக  சாய்பாபா பக்தை ஆனேன். எனக்கு மனஆறுதல் கிடைத்தது. இப்போது அவரது புகழ் பரப்பி வருகிறேன். தொடர்ந்து அரசியலிலும் இருக்கிறேன். என்றார். கவிதா தற்போது தமிழ் படம் ஒன்றில் அம்மாவாக நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. 

 


Post your comment





Related News
மகனின் படிப்பிற்காக பிரபல நடிகை செய்யும் தொழில் - வைரலாகும் புகைப்படம்.!
ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக கமல்ஹாசன் எழுதிய அற்புதமான கவிதை
நாரதன் படத்துக்காக மாடர்ன் பாட்டியாக நடித்த கவிதா!
சிம்புவின் ‘காற்று வாங்க போனேன் கவிதை வாங்கி வந்தேன்’..!
குளிர்பானத்தில் மயக்க மருந்தை கலந்து மகளை கடத்தினான்: கார் டிரைவர் மீது நடிகை கவிதா குற்றச்சாட்டு!
கார் டிரைவருடன் நடிகை கவிதா மகள் ஓட்டம் - ரகசிய திருமணமும் முடிந்தது!
சரோஜாதேவி மாதிரி இருக்கீங்க: புது நடிகைக்கு புகழாரம்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions