நாரதன் படத்துக்காக மாடர்ன் பாட்டியாக நடித்த கவிதா!

Bookmark and Share

நாரதன் படத்துக்காக மாடர்ன் பாட்டியாக நடித்த கவிதா!

நகுல்- நிகிஷா பட்டேல், பிரேம்ஜி, சுப்பு பஞ்சு, கவிதா, கும்கி அஸ்வின் உள்பட பலர் நடித்துள்ள படம் நாரதன். மணிசார்மா இசையமைத்துள்ள இந்த படத்தை நாகா வெங்கடேஷ் இயக்கியுள்ளார். இதன் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது.

அப்போது நாரதன் படம் குறித்து இயக்குனர் நாகா வெங்கடேஷ் கூறுகையில், இந்த படத்தில் நகுல் படம் முழுக்க புல் எனர்ஜியுடன் நடித்துள்ளார். இன்னொரு ஹீரோ போன்று பிரேம்ஜி நடித்திருந்தாலும், இருவரும் சந்தித்துக்கொள்ளும் காட்சிகள் இல்லை.

இந்த படத்தில் பிரேம்ஜியை புது டைமன்சனில் காண்பித்துள்ளேன். இதில் நடிக்க அவரை அழைத்தபோது, தலைவா கோபிச்சிக்காதே, நான் என் அண்ணனை தவிர மற்றவர்களின் படங்களில் நடிப்பதில்லை என்றார்.

அதோடு புல்லா என்னை நம்பியெல்லாம் பண்ணாதீங்க. அந்த அளவுக்கு நான் ஒர்த்தான ஆர்ட்டிஸ்ட் இல்லை என்று சொன்னார்.

ஆனபோதும், கூப்பிட்டபோதெல்லாம் வந்து நடித்துக்கொடுத்தார். அவருடைய போர்ஷனும் நல்லா வந்திருக்கு. அதே மாதிரி நிகிஷா பட்டேல் இந்த படத்திற்கு பிறகு தமிழ்நாடு முழுக்க பேசப்படுவார்.

அதோடு, இந்த படத்தில் ஒரு பாட்டி வேடம் உள்ளது. அதில் யாராவது பெரிய நடிகையை நடிக்க வைக்க வேண்டும் என்று யோசித்தபோதுதான் கவிதா சரியாக இருப்பார் என்று தோன்றியது.

அவர் தமிழில், ஓ மஞ்சு, ரவுடி ராக்கம்மா, ஆளுக்கொரு ஆசை, எங்க வாத்தியார் என நிறைய படங்களில் நடித்தவர். ஆனால், அவரை தேடியபோது கிடைக்கவில்லை. அப்போது, தமிழில் படவாய்ப்புகள் குறைந்து விட்டதால் அவர் ஆந்திராவில் குடியேறி விட்டதாக சொன்னார்கள்.

அதையடுத்து அவரது போன் நம்பரை கண்டுபிடித்து அழைத்தபோது, புதுவிதமான ஒரு மாடர்ன் பாட்டி வேடத்தில் நடிக்க வேண்டும் என்று சொன்னதும், கண்டிப்பாக நடிக்கிறேன் என்று சென்னை வந்தார். அந்த வகையில் சூப்பர் பாட்டியாக அற்புதமாக நடித்துக்கொடுத்துள்ளார் கவிதா.

அதே மாதிரி இந்த படத்தில் ராதாரவி, மயில்சாமி, எம்.எஸ்.பாஸ்கர், வையாபுரி என எல்லோரும் காமெடி செய்துள்ளனர். அதற்காக இதை காமெடி படம் என்று சொல்லி விட முடியாது.

ஆக்சன், காதல் என எல்லா அம்சங்களும் கலந்த படமாக வந்திருக்கிறது.அதோடு, நகுல், கும்கி அஸ்வின் சம்பந்தப்பட்ட காட்சிகளில் பெரும்பாலும் அவர்கள் ஓடிக்கொண்டேயிருக்க வேண்டும் என்பதால், 5 கேமராக்களை வைத்து படமாக்கினோம். அவர்களும் சளைக்காமல் நடித்துக்கொடுத்தார்கள்.

இப்படி படத்தில் நடித்த அனைவருமே நல்ல ஒத்துழைப்பு கொடுத்ததால் நாரதன் படமும் நல்ல ஜாலியாக கலகலப்பான படமாக வந்திருக்கிறது என்கிறார் இயக்குனர் நாகா வெங்கடேஷ்.


Post your comment





Related News
மகனின் படிப்பிற்காக பிரபல நடிகை செய்யும் தொழில் - வைரலாகும் புகைப்படம்.!
ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக கமல்ஹாசன் எழுதிய அற்புதமான கவிதை
அரசியலுக்கு சென்றதால் அம்மா வேடம்கூட கிடைக்கவில்லை: கவிதா வேதனை
சிம்புவின் ‘காற்று வாங்க போனேன் கவிதை வாங்கி வந்தேன்’..!
குளிர்பானத்தில் மயக்க மருந்தை கலந்து மகளை கடத்தினான்: கார் டிரைவர் மீது நடிகை கவிதா குற்றச்சாட்டு!
கார் டிரைவருடன் நடிகை கவிதா மகள் ஓட்டம் - ரகசிய திருமணமும் முடிந்தது!
சரோஜாதேவி மாதிரி இருக்கீங்க: புது நடிகைக்கு புகழாரம்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions