கவுண்டமணி பட டைட்டில் விவகாரம்? - டைரக்டர் கணபதி பாலமுருகன் பேட்டி

Bookmark and Share

கவுண்டமணி பட டைட்டில் விவகாரம்? - டைரக்டர் கணபதி பாலமுருகன் பேட்டி

ரீ-என்ட்ரியில் 49ஓ, வாய்மை படங்களில் நடித்துள்ள கவுண்டமணி அடுத்தபடியாக எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது என்ற படத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு மதுரையில் நடைபெற உள்ளது.

இதில் கேரவன் உரிமையாளராக நடிக்கிறார் கவுண்டமணி. இந்த படத்தை கணபதி பாலமுருகன் இயக்குகிறார். இப்படம் குறித்து ஏற்கனவே அறிவிக்கப்பட்டு மீடியாக்களில் கடந்த மாதத்தில் இருந்தே செய்திகள் வந்தவண்ணம் உள்ளன.

இந்த நிலையில், நேற்று திடீரென்று எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது என்ற பெயரில் இன்னொரு படத்தைப்பற்றிய செய்தியும் வெளியிடப்பட்டிருக்கிறது. அந்த படத்தை தொட்டில் சபதம், ரயிலுக்கு நேரமாச்சு ஆகிய படங்களை இயக்கிய பாரதிமோகன் இயக்குகிறார்.

ஆனால், இரண்டு படங்களுக்கும் ஒரே மாதிரியான டைட்டில் அறிவிக்கப்பட்டிருப்பதால், இதற்கு முன்பு துப்பாக்கி, கள்ளத்துப்பாக்கி என இரண்டு படங்கள் உருவாகி பின்னர் படங்கள் ரிலீசாகிற நேரத்தில் கோர்ட்டு வழக்கு என்று பிரச்சினைகள் ஏற்பட்டதால்.

அதேபோன்று இந்த படங்களுக்கிடையேயும் பிரச்சினை விஸ்வரூபமெடுக்குமோ? என்றொரு நிலையும் உருவாகியிருக்கிறது. இந்த நிலையில், கவுண்டமணி நடிக்கும் எனக்கும் வேறு எங்கும் கிளைகள் கிடையாது படத்தை இயக்கும் கணபதி பாலமுருகனிடம் இந்த பிரச்சினை குறித்து கேட்டபோது, இந்த டைட்டிலை நான் பல மாதங்களுக்கு முன்பே புரொடியூசர் கவுன்சிலில் பதிவு செய்து விட்டேன்.

அதையடுத்து கவுண்டமணி அண்ணனிடம் கதை சொல்லி ஓகே பண்ணி இப்போது ஸ்கிரிப்ட் வேலைகளை முடித்து படப்பிடிப்புக்கு செல்ல தயாராகிக்கொண்டிருக்கிறேன்.

இந்த நேரத்தில் திடீரென்று நான் பதிவு செய்துள்ள அதே டைட்டிலில் இன்னொரு படமும் உருவாக இருப்பதாக செய்தி வெளியிடப்பட்டிருப்பது அதிர்ச்சியாக உள்ளது.இதுகுறித்து நான் விசாரித்தபோது, நான் புரொடியூசர் கவுன்சிலில் பதிவு செய்திருக்க, அவர்களோ கில்டில் பதிவு செய்திருக்கிறார்களாம்.

ஆனால் இந்த இரண்டு அமைப்புகளுக்கிடையேயும் சரியான தொடர்பு இல்லாததே இதற்கு காரணமாகியுள்ளது. அதேசமயம், தங்களிடம் பதிவு செய்யப்பட்டுள்ள டைட்டில்களை அவர்கள் இணையதளத்தில் பதிவு செய்து வெளியிட்டாலே அதைப்பார்த்து தெரிந்து கொண்டு, அதில் இல்லாத டைட்டில்களாக நாங்கள் பதிவு செய்வோம்.

ஆனால் அதுவும் வெளிப்படையாக இல்லை. விளைவு, இப்போது ஒரே மாதிரியான டைட்டிலை இரண்டு இடங்களிலும் பதிவு செய்து விட்டு தேவையில்லாத பிரச்சினை ஏற்பட்டிருக்கிறது. மேலும், இந்த பிரச்சினை குறித்து நான் கவுண்டமணி அண்ணனிடம் தெரிவித்து விட்டேன்.

மற்றபடி இப்போதைக்கு இதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுப்பதாக இல்லை. பட வேலைகள் இருப்பதால் அதில் மட்டுமே எனது முழுக்கவனமும் உள்ளது. அதனால் இந்த டைட்டில் குறித்து பின்னர்தான் அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பேன் என்று கூறிய கணபதி பாலமுருகன், புரொடியூசர் கவுன்சில்-கில்டு என்ற இரண்டு அமைப்புகளும் இணைந்து செயல்பட்டால்தான் இதுபோன்ற பிரச்சினைகளை தவிர்க்க முடியும் என்றும் தனது கருத்தினை தெரிவித்துக்கொண்டார்.


Post your comment





Related News
கவுண்டமணி நலமுடன் உள்ளார்: வாட்ஸ் அப் வதந்திக்கு முற்றுப்புள்ளி
மீண்டும் ஹீரோவாக வலம் வருவாரா கவுண்டமணி?
ஹீரோக்களுக்கு நிகராக கவுண்டமணி சாதனை
படப்பிடிப்பில் பிறந்த நாள் கொண்டாடிய கவுண்டமணி
போட்டி இல்லாத களத்தில் குதிக்கக் காத்திருக்கும் கவுண்டமணி!
கவுண்டமணிக்கு கைதட்டல்!
கவுண்டமணியின் தொழில் பக்தி
இசை விழாவை விட ஷூட்டிங் முக்கியம் கவுண்டமணி கறார்
கவுண்டமணியுடன் நடிக்கும் பாடகர் வேல்முருகன்!
கவுண்டமணிக்கு பில்டப் பாடல்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions