அசரவைத்த கவுண்டமணி!

Bookmark and Share

அசரவைத்த கவுண்டமணி!

கவுண்டமணிக்காக தயாரிப்பாளர்களும், டைரக்டர்களும் காத்திருப்பது இன்று நேற்று நடப்பதல்ல. 16 வயதினிலே, கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள் படங்களில் நடித்தபோதே அவரது மார்க்கெட் சூடுபிடிக்கத் தொடங்கி விட்டது.

அந்த வகையில் 30 ஆண்டுகளாக கோலிவுட்டில் பரபரப்பான நடிகராக இருந்தவர் கவுண்டமணி. ஆனால், கடந்த சில ஆண்டு இடைவெளிக்குப்பிறகு 49ஓ, வாய்மை படங்கள் மூலம் மீண்டும் நடிக்கத் தொடங்கிய அவர், இப்போது எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது என்ற படத்தில் ஜீன்ஸ் பேண்ட் போட்ட இளவட்ட ஹீரோ போன்ற கெட்டப்பில் நடித்து வருகிறார்.

இந்த நேரத்தில் கவுண்டமணியை அடுத்தடுத்து புக் பண்ணவும் சில டைரக்டர்கள் ஆர்வத்தில் உள்ளனர். ஆனபோதும், அவர் விவசாயி வேடத்தில் நடித்துள்ள 49ஓ படம் எதிர்பார்க்கப்பட்டு வருவதால், அந்த படத்தில் கவுண்டமணியின் நடிப்புக்கு எந்த அளவுக்கு ரசிகர்களின் வரவேற்பை பெறுகிறது என்பதை தெரிந்த பிறகு புக் பண்ணலாம் என்று காத்திருக்கிறார்கள்.

ஆனபோதும், அடுத்தபடியாக படவிசயமாக யாரும் தன்னை அணுகாதபோதும், தனது படக்கூலியை 50 லட்சமாக உயர்த்தி விட்டிருக்கிறார் கவுண்டர். அவரது இந்த தில்லைப்பார்த்து டோட்டல் கோலிவுட்டே அசந்து நிற்கிறது.


Post your comment





Related News
கவுண்டமணி நலமுடன் உள்ளார்: வாட்ஸ் அப் வதந்திக்கு முற்றுப்புள்ளி
மீண்டும் ஹீரோவாக வலம் வருவாரா கவுண்டமணி?
ஹீரோக்களுக்கு நிகராக கவுண்டமணி சாதனை
படப்பிடிப்பில் பிறந்த நாள் கொண்டாடிய கவுண்டமணி
போட்டி இல்லாத களத்தில் குதிக்கக் காத்திருக்கும் கவுண்டமணி!
கவுண்டமணிக்கு கைதட்டல்!
கவுண்டமணியின் தொழில் பக்தி
இசை விழாவை விட ஷூட்டிங் முக்கியம் கவுண்டமணி கறார்
கவுண்டமணியுடன் நடிக்கும் பாடகர் வேல்முருகன்!
கவுண்டமணிக்கு பில்டப் பாடல்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions