போட்டி இல்லாத களத்தில் குதிக்கக் காத்திருக்கும் கவுண்டமணி!

Bookmark and Share

போட்டி இல்லாத களத்தில் குதிக்கக் காத்திருக்கும் கவுண்டமணி!

கவுண்டமணி-செந்தில் காமெடி கூட்டணிதான் தமிழ் சினிமாவில் அதிக காலம் வலம் வந்தது. இதில் கவுண்டமணி, வெறும் காமெடியனாக மட்டுமே இல்லாமல் சில படங்களில் குணசித்திர வேடங்களிலும் நடித்து கண்கலங்க வைத்திருக்கிறார்.

இந்த நிலையில், தற்போது அவர் நாயகனாக நடித்துள்ள 49ஓ படத்தில் விவசாயிகளின் பிரச்சினைகளை சொல்லும் விதமாகவும், அவர்களின் அறியாமையை அவர்களுக்கு உணர்த்தும் விதமாகவும் நடித்துள்ளார். அந்த பெரிய கருத்தை அவர்களுக்கு புரிய வேண்டும் என்பதற்காக காமெடி கலந்து சொல்லியிருக்கிறாராம்.  

அதனால் இந்த படத்தை நகரம் மட்டுமின்றி கிராமப்புறங்களில் உள்ள விவசாயிகள் கண்டிப்பாக ஆதரிப்பார்கள் என்று நம்பும் கவுண்டமணி, எனக்கான ரசிகர்கள் இன்னும் அப்படியேதான் இருக்கிறார்கள்.

எனது படங்களை எப்போதும் போல் இப்போதும் ஆதரிப்பார்கள் என்று கூறி வருகிறார். அதோடு, வாய்மை படத்தில் ஒரு கேரக்டரில் நடித்து விட்டு, எனக்கு வேறு எங்கும் கிளைகளில் கிடையாது படத்தில் தற்போது நடித்து வருபவர், நடித்து முடித்து ரிலீசுக்கு தயாராக இருக்கும் 49ஓ படத்தை விரைவில் வெளியிடுமாறும் அப்பட நிறுவனத்தை கேட்டுக்கொண்டு வருகிறாராம்.

இருப்பினும், போட்டி இல்லாத களத்தில் அப்படத்தை இறக்கி விட வேண்டும் என்று சம்பந்தப்பட்டவர்கள் காத்திருப்பதாக கூறப்படுகிறது.


Post your comment





Related News
கவுண்டமணி நலமுடன் உள்ளார்: வாட்ஸ் அப் வதந்திக்கு முற்றுப்புள்ளி
மீண்டும் ஹீரோவாக வலம் வருவாரா கவுண்டமணி?
ஹீரோக்களுக்கு நிகராக கவுண்டமணி சாதனை
படப்பிடிப்பில் பிறந்த நாள் கொண்டாடிய கவுண்டமணி
கவுண்டமணிக்கு கைதட்டல்!
கவுண்டமணியின் தொழில் பக்தி
இசை விழாவை விட ஷூட்டிங் முக்கியம் கவுண்டமணி கறார்
கவுண்டமணியுடன் நடிக்கும் பாடகர் வேல்முருகன்!
கவுண்டமணிக்கு பில்டப் பாடல்!
20-ந்தேதி கவுண்டமணி படம் தொடங்குகிறது!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions