ஒபாமாவுக்கு கண்டனம் தெரிவிக்கும் கவுண்டமணி!

Bookmark and Share

ஒபாமாவுக்கு கண்டனம் தெரிவிக்கும் கவுண்டமணி!

ரீ-என்ட்ரியில் 49 ஓ, வாய்மை படங்களில் நடித்துள்ள கவுண்டமணி, அடுத்தபடியாக நடிக்கும் படம் 'எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது'. இந்த படத்தில் இளமை ததும்பும் கதையின் நாயகனாக நடிக்கிறார் கவுண்டமணி.

அதோடு, அவரது காமெடி ரவுசும் அதிக தூக்கலாக இருக்குமாம்.அப்படம் பற்றி இயக்குனர் கணபதி பாலமுருகன் கூறும்போது, இந்த படத்தில் கவுண்டமணி சினிமா படப்பிடிப்புகளுக்கு வாடகைக்கு கேரவன்களை அனுப்பும் உரிமையாளராக நடிக்கிறார்.குறிப்பாக, நான் ஒரு பிஸ்னஸ் பண்ணினா அதுல எல்லாமே நான்தான் இருக்கனும்.

எனக்கு போட்டியே இருக்கக்கூடாது என்று நினைக்கிற கேரக்டர் கவுண்டமணி. அந்த வகையில் தமிழ் சினிமாவில் அர்னால்டு நடிக்கும் படமாக இருந்தாலும் சரி, புதிதாக வளர்ந்து வரும் அட்டகத்தி தினேஷ் நடிக்கிற படமாக இருந்தாலும் சரி, தன்னுடைய கேரவன்தான் செல்ல வேண்டும் என்று படங்களுக்கேற்ற வண்டிகளை அனுப்பி வருவார்.

அதோடு, அவரது பிராண்ட் டயலாக்குகளும் படம் முழுக்க இடம்பெற்றிருக்கிறது. உதாரணத்துக்கு, இந்தியா வந்த ஒபாமா, சோனியாவை சந்தித்தார், ராகுலை சந்தித்தார். அவர் ஏன் அன்னா ஹசாரேயை சந்திக்கவில்லை. அதனால் ஒபாமாவுக்கு என்னுடைய கண்டனம் என்பார். அதேபோல், ராமசாமி பையன் சீனுவுக்கு என் வாழ்த்துக்கள் என்பார்.

அது யாருன்னு கேட்டா, அதாண்டா இடம் பொருள் ஏவல்ன்னு அழகான பெயருடன் படமெடுக்கிற சீனுராமசாமியைத்தான் சொன்னேன் என்பார். இப்படி படத்துல ஏகப்பட்ட பஞ்ச் டயலாக்குகள். அதேசமயம் தேவையில்லாமல் யாரையும் வார மாட்டார். என்னைப்பொறுத்தவரை இந்த படத்தை ரஜினியை வைத்து ஒரு படம் பண்ற மாதிரிதான் பண்றேன்.

காரணம் ரஜினி சாருக்கு என்னவொரு பாப்புலாரிட்டியோ அது கவுண்டமணி சாருக்கு இருக்கு. காமெடி சூப்பர் ஸ்டார் அவர். இந்த படத்தில் அவர் பேசும் டயலாக்குகளை இன்றைய ரசிகர்கள் விரும்பும் வகையில் படம் முழுக்க வைத்திருக்கிறேன் என்று கூறும் அவர், இந்த படத்துல தனது கேரவன்ல ஒர்க் பண்றவங்களை கூட்டிக்கிட்டு ஒரு ஜாலி டிரிப் போறாருங்கிற மாதிரிதான கதை.

சென்னையில் இருந்து மதுரைக்கு போற ஒரு கேரக்டர் வழியில் சந்திக்கிற பிரச்சினைதான் இந்த எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது படம் என்கிறார். அவரிடத்தில், கவுண்டமணி இந்த படத்தில் இளவட்டமாக வருகிறாரா? இல்லை தனது நிஜ கெட்டப்பிலேயே நடிக்கிறாரா? என்று கேட்டபோது, அவரது வயதுக்கு மேட்சான வேடத்தில்தான் நடிக்கிறார்.

கதைப்படி அவருக்கு திருமண வயதில் ஒரு மகள் இருப்பார். அதோடு, கவுண்டமணிக்கு ஜோடியாக நடிக்க மாஜி ஹீரோயின்கள் சிலரிடம் பேசி வருகிறோம். இன்னும் யார் என்பது முடிவாகவில்லை.

மற்றபடி, கவுண்டமணி அணியும் காஸ்டியூம்கள் அவரை யூத்தாக காட்டும்.மேலும், கவுண்டமணி இந்த படத்தில் சர்ச்சைக்குரிய டயலாக்குகளை பேசி நடிப்பது போல் செய்திகள் உலவுகிறது? ஆனால், அப்படியெல்லாம் எதுவுமே இல்லை. இது ஒரு ஜாலியான படம். சினிமாக்காரர்களையோ, அரசியல்வாதிகளையோ யாரையும் அவர் தாக்கிப்பேசவில்லை.

அவர் பேசும் டயலாக்குகள் எல்லாமே காமெடியாகத்தான் இருக்கும். மேலும், காதலுக்காக போராடும் வேடத்தில் கவுண்டமணி நடித்திருக்கிறார். அதோடு, ஒரு அப்பாவுக்கும் மகளுக்குமிடையே உள்ள பந்தமும் இப்படத்தின் முக்கிய கதையம்சமாகி உள்ளது. அதனால் மற்றவர்கள் நினைப்பது போல் சர்ச்சைக்குரிய விசயங்கள் எதுவும் இந்த படத்தில் இருக்காது. இது அனைத்து தரப்பினரும் பார்த்து ரசிக்கக்கூடிய ஒரு ஜாலியான படமாகவே இருக்கும் என்கிறார் இயக்குனர் கணபதி பாலமுருகன்.


Post your comment

Related News
கவுண்டமணி நலமுடன் உள்ளார்: வாட்ஸ் அப் வதந்திக்கு முற்றுப்புள்ளி
மீண்டும் ஹீரோவாக வலம் வருவாரா கவுண்டமணி?
ஹீரோக்களுக்கு நிகராக கவுண்டமணி சாதனை
படப்பிடிப்பில் பிறந்த நாள் கொண்டாடிய கவுண்டமணி
போட்டி இல்லாத களத்தில் குதிக்கக் காத்திருக்கும் கவுண்டமணி!
கவுண்டமணிக்கு கைதட்டல்!
கவுண்டமணியின் தொழில் பக்தி
இசை விழாவை விட ஷூட்டிங் முக்கியம் கவுண்டமணி கறார்
கவுண்டமணியுடன் நடிக்கும் பாடகர் வேல்முருகன்!
கவுண்டமணிக்கு பில்டப் பாடல்!
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions