20-ந்தேதி கவுண்டமணி படம் தொடங்குகிறது!

Bookmark and Share

20-ந்தேதி கவுண்டமணி படம் தொடங்குகிறது!

ரீ-என்ட்ரியில் 49ஓ, வாய்மை ஆகிய படங்களில் நடித்திருக்கிறார் கவுண்டமணி. ஆனால் அந்த படங்கள் இன்னும் திரைக்கு வரவில்லை. இந்த நிலையில், கவுண்டமணி நாயகனாக நடிக்கும் எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது என்ற படத்தின் ஸ்கிரிப்ட் வேலைகள் கடந்த இரண்டு மாதங்களாக நடைபெற்று வந்தது.

அந்த சமயத்தில் அதேபோன்றொரு டைட்டிலில் அதாவது, எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது என்ற பெயரில் இன்னொரு படமும் பூஜை போடப்பட்டது. கவுண்டமணி நடிக்கும் படத்தில் டைட்டிலை புரொடியூசர் கவுன்சிலில் பதிவு செய்திருக்க, அந்த இன்னொரு படத்தின் டைட்டிலை கில்டில் பதிவு செய்துள்ளனர்.  

இதனால் இரண்டு பட டைட்டில்களும் ஒரே மாதிரியாக இருப்பதால் பஞ்சாயத்து நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்த டைட்டிலை முதலில் அறிவித்த கவுண்டமணி படத்தின் இயக்குனர் கணபதி பாலமுருகன், இப்போதைக்கு டைட்டில் பிரச்சினையை கையில் எடுக்கப்போவதில்லை.

எனது முழு கவனமும் படத்தை நல்லபடியாக இயக்க வேண்டும் என்பதில் மட்டுமே உள்ளது என்று சொல்லி அப்புறம் பார்க்கலாம் என்று தள்ளி வைத்து விட்டு கதை விவாதத்தில் மூழ்கினார்.

இந்த நிலையில், வருகிற 20-ந்தேதி முதல்கட்ட படப்பிடிப்பை தொடங்குகிறார். முதலில் மதுரையில் லொகேசன் பார்த்திருந்த அவர், தற்போது கோடை வெயில் வறுத்து எடுப்பதால், கொடைக்கானலில் படப்பிடிப்பை தொடங்குகிறாராம். அதையடுத்து ஊட்டியிலும் படப்பிடிப்பு தொடர்ந்து, இறுதிகட்ட படப்பிடிப்பு மதுரையில் நடக்கிறதாம்.


Post your comment





Related News
கவுண்டமணி நலமுடன் உள்ளார்: வாட்ஸ் அப் வதந்திக்கு முற்றுப்புள்ளி
மீண்டும் ஹீரோவாக வலம் வருவாரா கவுண்டமணி?
ஹீரோக்களுக்கு நிகராக கவுண்டமணி சாதனை
படப்பிடிப்பில் பிறந்த நாள் கொண்டாடிய கவுண்டமணி
போட்டி இல்லாத களத்தில் குதிக்கக் காத்திருக்கும் கவுண்டமணி!
கவுண்டமணிக்கு கைதட்டல்!
கவுண்டமணியின் தொழில் பக்தி
இசை விழாவை விட ஷூட்டிங் முக்கியம் கவுண்டமணி கறார்
கவுண்டமணியுடன் நடிக்கும் பாடகர் வேல்முருகன்!
கவுண்டமணிக்கு பில்டப் பாடல்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions