கவுண்டமணியை டென்சன் செய்த டைட்டில் பிரச்சினை!

Bookmark and Share

கவுண்டமணியை டென்சன் செய்த டைட்டில் பிரச்சினை!

2010ல் ஜக்குபாய், பொள்ளாச்சி மாப்பிள்ளை ஆகிய படங்களில் நடித்த கவுண்டமணி அதன்பிறகு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் சில ஆண்டுகளாக சினிமாவில் நடிக்காமல் விலகியிருந்தார்.

அப்படியிருந்த அவரை, மீண்டும் காமெடியனாக கொண்டு வராமல் 49 ஓ படம் மூலம் ஹீரோவாக களமிறக்கியுள்ளனர். தற்போது 75 வயதான கவுண்டர், அந்த படத்தில் விவசாயி வேடத்தில் நடித்திருக்கிறார்.

அதையடுத்து, வாய்மை என்ற படத்தில் கோட்டு சூட் அணிந்து மாடர்ன் கெட்டப்பிலும் நடித்திருக்கிறார். ஆனால், அந்த இரண்டு படங்களுமே இன்னும் வியாபாரமாகவில்லை.

அதனால் இதோ அதோ என்ற ரிலீஸ் தேதியை இழுத்துக்கொண்டே வருகிறார்கள். ஆனால் இந்த நேரத்தில் மீண்டும் கவுண்டமணியை வைத்து எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது என்ற படத்தை இயக்க தயாராகி வருகிறார் புதுமுக டைரக்டர் கணபதி பாலமுருகன்.

ஆனால், தற்போது எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது என்ற பெயரில் இன்னொரு படமும் தயாராகி வருவதால், விசயம் கவுண்டமணியின் காதுக்கு சென்றதில் இருந்தே டென்சனில் காணப்படுகிறாராம்.

ஏற்கனவே தான் நடித்து வெளியான இரண்டு படங்களையும் வெளியிடாமல் வைத்திருக்கிறார்கள். இந்த நேரத்தில் மீண்டும் நாயகனாக நடிக்கும் இந்த படத்திற்கு படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே டைட்டில் பிரச்சினை ஏற்பட்டிருப்பதால் பெரிய குழப்பத்தில் இருக்கிறாராம் கவுண்டமணி.

அதனால் புதிய படங்களில் அவரை நடிக்க வைக்க யாரேனும் கதை சொல்ல சென்றால், நடிச்ச படங்களே பிரச்சினையில் கிடக்கு. இதுல இன்னுமா அட போங்கப்பா என்ற கதையே கேட்காமல் அவர்களை துரத்துகிறாராம் கவுண்டர்.

 


Post your comment





Related News
கவுண்டமணி நலமுடன் உள்ளார்: வாட்ஸ் அப் வதந்திக்கு முற்றுப்புள்ளி
மீண்டும் ஹீரோவாக வலம் வருவாரா கவுண்டமணி?
ஹீரோக்களுக்கு நிகராக கவுண்டமணி சாதனை
படப்பிடிப்பில் பிறந்த நாள் கொண்டாடிய கவுண்டமணி
போட்டி இல்லாத களத்தில் குதிக்கக் காத்திருக்கும் கவுண்டமணி!
கவுண்டமணிக்கு கைதட்டல்!
கவுண்டமணியின் தொழில் பக்தி
இசை விழாவை விட ஷூட்டிங் முக்கியம் கவுண்டமணி கறார்
கவுண்டமணியுடன் நடிக்கும் பாடகர் வேல்முருகன்!
கவுண்டமணிக்கு பில்டப் பாடல்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions