படப்பிடிப்பில் பிறந்த நாள் கொண்டாடிய கவுண்டமணி

Bookmark and Share

படப்பிடிப்பில் பிறந்த நாள் கொண்டாடிய கவுண்டமணி

மீண்டும் ஹீரோவாக நடிக்கத் தொடங்கிய பிறகு கவுண்டமணி ஆளே மாறிவிட்டார். பத்திரிக்கைகளுக்கு பேட்டியே தரமாட்டேன் என்று அடம்பிடிக்கும் அவர் இப்போது பேட்டி கொடுக்க ஆரம்பித்துவிட்டார்.

"என்னப்பா பண்றது படம் தியேட்டருக்கு போகணும்னா அந்த கருமத்தை செஞ்சிதானே ஆகணும்" என்கிறார். அடுத்து தான் நடித்து வெளிவர முடியாமல் தவிக்கும் படம் வெளிவர முயற்சிகள் எடுக்கிறார்.

இதுவரை தனது பிறந்த நாளை கொண்டாடாத கவுண்டமணி தனது பிறந்த நாளை படப்பிடிப்பிலேயே கொண்டாடியிருக்கிறார். தற்போது அவர் நடித்து வரும் எனக்கு வேறு எங்கும் கிளைகள் இல்லை படத்தின் படப்பிடிப்பு இடைவெளியில் படப்பிடிப்பு குழுவினருடன் தனது பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடியதோடு.

அவர்களது வாழ்த்துக்களையும் பெற்றுக் கொண்டிருக்கிறார். ஒருகாலத்தில் பிறந்த நாள் கொண்டாடுவதை "ஏம்ப்பா நாம என்ன காந்தியா, காமராசரா பிறந்த நாள் கொண்டாடுறதுக்கு நீ ஒரு மொள்ள மாரி நான் ஒரு முடிச்சவிக்கி" என்று டயலாக் பேசியவர்தான் கவுண்டமணி.

இப்போது ஆளே மாறிவிட்டார் இனி "சினிமாவுல இதெல்லாம் சாதாரணமப்பா"ன்னு சமாளிப்பாரோ என்னவோ.


Post your comment





Related News
கவுண்டமணி நலமுடன் உள்ளார்: வாட்ஸ் அப் வதந்திக்கு முற்றுப்புள்ளி
மீண்டும் ஹீரோவாக வலம் வருவாரா கவுண்டமணி?
ஹீரோக்களுக்கு நிகராக கவுண்டமணி சாதனை
போட்டி இல்லாத களத்தில் குதிக்கக் காத்திருக்கும் கவுண்டமணி!
கவுண்டமணிக்கு கைதட்டல்!
கவுண்டமணியின் தொழில் பக்தி
இசை விழாவை விட ஷூட்டிங் முக்கியம் கவுண்டமணி கறார்
கவுண்டமணியுடன் நடிக்கும் பாடகர் வேல்முருகன்!
கவுண்டமணிக்கு பில்டப் பாடல்!
20-ந்தேதி கவுண்டமணி படம் தொடங்குகிறது!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions