ஹீரோக்களுக்கு நிகராக கவுண்டமணி சாதனை

Bookmark and Share

ஹீரோக்களுக்கு நிகராக கவுண்டமணி சாதனை

ரஜினி கமல் அஜித் சூர்யா விஜய் போன்ற முன்னணி ஹீரோக்களின் பிறந்தநாள் என்றால் மட்டுமே ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவிப்பார்கள்.

அதன்காரணமாக அவர்களின் ரசிகர்கள் உருவாக்கும் ஹேஷ்டேக்குகள் ட்விட்டரில் டிரெண்டிங்கில் இடம் பிடிக்கும். முதல்முறையாக காமெடியன் ஒருவரின் பெயர் இந்திய அளவில் டிரெண்டிங்கில் இடம்பிடித்திருக்கிறது.

அது வேறு யாருமல்ல..  கவுண்டமணிதான்.  அவரின் பிறந்தநாளை (மே 25)  முன்னிட்டு #HappyBirthdayGoundamani என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் இந்திய அளவில் முதலிடத்தைப் பிடித்தது.

தமிழ்சினிமாவின் தலைசிறந்த காமெடியன்கள் எத்தனையோ பேர் இருந்தாலும் கவுண்டமணியின் காமெடி காலத்தைக் கடந்தது. செந்திலுடன் சேர்ந்து அவர் அடித்த காமெடிகளை மிஞ்ச இப்போது வரை இன்னொரு கூட்டணி உருவாகவேயில்லை.  எதிர்காலத்திலும் வாய்ப்பு இல்லை.

பல வருடங்கள் தமிழ் சினிமாவில் கோலோச்சிய கவுண்டமணி கடந்த சில வருடங்களாக சர்க்கரை நோய் காரணமாக திரைத்துறையைவிட்டு விலகியிருந்தார். இப்போது வாய்மை, 49ஓ என மீண்டும் அடுத்த இன்னிங்ஸஸுக்குத் தயாராகிவிட்டார்.

1939 ஆம் வருடம் பிறந்த இவர் ஆரம்பத்தில் சின்னச் சின்ன வேடங்களில் நடித்து வந்து அதன்பிறகு மிகப்பெரிய காமெடியனாக உருவெடுத்தார். இவரது உண்மையான பெயர் சுப்ரமணி கருப்பையா என்பது பலருக்கும் தெரியாத தகவல். டுவிட்டரில் ரசிகர்கள் வாழ்த்தியவர்களில் சிலர்...


Post your comment





Related News
கவுண்டமணி நலமுடன் உள்ளார்: வாட்ஸ் அப் வதந்திக்கு முற்றுப்புள்ளி
மீண்டும் ஹீரோவாக வலம் வருவாரா கவுண்டமணி?
படப்பிடிப்பில் பிறந்த நாள் கொண்டாடிய கவுண்டமணி
போட்டி இல்லாத களத்தில் குதிக்கக் காத்திருக்கும் கவுண்டமணி!
கவுண்டமணிக்கு கைதட்டல்!
கவுண்டமணியின் தொழில் பக்தி
இசை விழாவை விட ஷூட்டிங் முக்கியம் கவுண்டமணி கறார்
கவுண்டமணியுடன் நடிக்கும் பாடகர் வேல்முருகன்!
கவுண்டமணிக்கு பில்டப் பாடல்!
20-ந்தேதி கவுண்டமணி படம் தொடங்குகிறது!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions