கவுண்டமணியின் கலாய்ப்பு!

Bookmark and Share

கவுண்டமணியின் கலாய்ப்பு!

சினிமாக்காரர்களை நேரடியாகவே கிண்டல் செய்து வருபவர் கவுண்டமணி. தானும் ஒரு சினிமாக்காரர் என்றபோதும் அதைப்பற்றி கவலைப்பட மாட்டார். அதேசமயம், தான் சினிமாக்காரன் என்கிற பந்தாக்களை அவர் செய்ய மாட்டார். நடிப்பு எனது வேலை. அதற்கான கூலியை வாங்கிக்கொண்டு நடிக்கிறேன் அவ்வளவுதான்.

இது என்ன பெரிய சாதனையா என்று யதார்த்தமாக பேசக்கூடியவர். அப்படிப்பட்ட கவுண்டமணி, சில ஆண்டுகள் உடல்நிலை சரியில்லாமல் இருந்தவர், தற்போது ரீ-என்ட்ரியில் வாய்மை, 49 ஓ ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

இதில் 49 ஓ படத்தில் அவரே ஹீரோவாக நடிக்கிறார். வாய்மை படத்தில் ஒரு டாக்டர் கேரக்டர் என்றபோதும் அவருக்கு பாடல்கூட உள்ளதாம். இதையடுத்து, எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் இல்லை என்ற படத்தில் நடிக்க உள்ளார் கவுண்டமணி.

இந்த படத்தில் அவர் எந்த மாதிரியான ஹீரோவாக நடிக்கிறார் என்பதை விசாரித்தபோது, கேரவன் உரிமையாளராக நடிப்பதாக தெரிய வந்தது. அதாவது படப்பிடிப்பு தளங்களில் நடிகர் -நடிகைகள் ஓய்வெடுக்கும் கேரவனை வாடகைக்கு விடுபவராம்.

அதனால் சும்மாவே சினிமாக்காரர்களை கிண்டலடிக்கும் கவுண்டமணி, இந்த படத்தில் கேரவன் லூட்டிகளையும் தனது பாணியில் ஜாலியாக கலாய்ப்பார் என்று தெரிகிறது.. அதனால் இதுவரை கவுண்டமணி செய்த காமெடிகளில் இருந்து இப்படத்தில் இன்னும் ஸ்பெசல் காமெடிகள் இடம்பெறும் என்கிறார்கள். 


Post your comment





Related News
கவுண்டமணி நலமுடன் உள்ளார்: வாட்ஸ் அப் வதந்திக்கு முற்றுப்புள்ளி
மீண்டும் ஹீரோவாக வலம் வருவாரா கவுண்டமணி?
ஹீரோக்களுக்கு நிகராக கவுண்டமணி சாதனை
படப்பிடிப்பில் பிறந்த நாள் கொண்டாடிய கவுண்டமணி
போட்டி இல்லாத களத்தில் குதிக்கக் காத்திருக்கும் கவுண்டமணி!
கவுண்டமணிக்கு கைதட்டல்!
கவுண்டமணியின் தொழில் பக்தி
இசை விழாவை விட ஷூட்டிங் முக்கியம் கவுண்டமணி கறார்
கவுண்டமணியுடன் நடிக்கும் பாடகர் வேல்முருகன்!
கவுண்டமணிக்கு பில்டப் பாடல்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions