நடிகை காவ்யா மாதவனுடன் திருமணமா? நடிகர் திலீப் பரபரப்பு பேட்டி

Bookmark and Share

நடிகை காவ்யா மாதவனுடன் திருமணமா? நடிகர் திலீப் பரபரப்பு பேட்டி

மலையாள நட்சத்திர ஜோடி திலீப்-மஞ்சு வாரியார். இவர்களுக்கு மீனாட்சி என்ற மகள் உள்ளார்.

இனிமையாக சென்ற இவர்களின் இல்லறத்தில் திடீரென கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர். மலையாள திரையுலகில் இவர்களின் பிரிவு பரபரப்பாக பேசப்பட்டது.

மஞ்சு வாரியாரை திலீப் பிரிவதற்கு நடிகை காவ்யா மாதவன்தான் காரணம் என்று கூறப்பட்டது. அப்போது காவ்யா மாதவனும் கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்தார். இந்த புகாரால் இருவரும் மன உளைச்சலுக்கு ஆளானார்கள்.

அதன் பிறகு காவ்யா மாதவனை திருமணம் செய்து கொள்வீர்களா? என்று திலீப்பிடம் நிருபர்கள் பலமுறை கேள்வி எழுப்பியபோது அதற்கு பதில் அளிக்க திலீப் மறுத்து வந்தார்.

தற்போது மீண்டும் இந்த விவகாரம் குறித்து திலீப்பிடம் கேள்விகள் எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்து ஒரு மலையாள பத்திரிகைக்கு அவர் அளித்த பேட்டி வருமாறு:-

எனது வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம். அதில், என்ன நடந்ததாலும் அனைவருக்கும் தெரிய வரும். நடிகை காவ்யா மாதவனை திருமணம் செய்வது பற்றி ஒருபோதும் எண்ணியதில்லை. காலம்தான் இதற்கு பதில் கூறும்.

எனக்கு விவாகரத்து நடந்தபோது பல்வேறு காரணங்கள் கூறப்பட்டது. விவாகரத்துக்கான காரணத்தை நான் கூறினால் அது பலருக்கும் வேதனையை ஏற்படுத்தும். எனது விவாகாரத்தின்போது காவ்யாமாதவனின் பெயரும் அதில் இழுக்கப்பட்டது. இதனால் அவர் வேதனைக்கு ஆளானார்.

எனது மறுமணம் பற்றி எனது மகள்தான் முடிவு செய்ய வேண்டும். வழக்கமாக ஒரு குடும்பத்தில் மகனுக்கோ, மகளுக்கோ திருமணம் செய்து வைக்க அவர்களின் பெற்றோர் பேசி முடிவு செய்வார்கள்.

ஆனால் எனது வி‌ஷயத்தில் இந்த நிகழ்வு தலைகீழாக உள்ளது. தந்தையின் திருமணம் பற்றி முடிவு எடுக்க மகளுக்கு அதிகாரம் அளித்துள்ளேன். இதன் மூலம் என் மகளுக்கு நான், குழந்தையாக மாறி உள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.


Post your comment





Related News
12 வருடத்திற்குப் பிறகு மீண்டும் மாதவனுடன் இணையும் பிரபல நடிகை
யுவன் பாடலை வெளியிடும் மாதவன்
மீண்டும் மாதவனுடன் ஜோடி சேரும் பிரபல நடிகை
சர்வதேச காமென்வெல்த் போட்டியில் இந்தியாவுக்காக பதக்கம் வென்ற மாதவனின் மகன்.!
காயம் காரணமாக மாதவனுக்கு மேலுமொரு சோகம்
பிரபல நடிகர் மாதவனுக்கு திடீர் அறுவை சிகிக்சை - அதிர்ச்சி புகைப்படம் உள்ளே.!
கனடா பிரதமரை சந்தித்த முன்னணி தமிழ் நடிகர் - வைரலாகும் புகைப்படம்.!
மாதவனுக்காக இப்படியொரு கொடுமை - கலங்க வைக்கும் அதிர்ச்சி தகவல்.!
கன்னத்தில் முத்தமிட்டால் குழந்தை அமுதாவுக்கு திருமணம் - மாப்பிள்ளை யார் தெரியுமா?
படங்களுக்கு டாடா சொல்லி சீரியலுக்கு தாவிய மாதவன்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions