“ஷூட்டிங்ஸ்பாட்டில் எனக்கு தெரிந்த முகங்கள் இருக்கவேண்டும்” - காவ்யா மாதவன்..!

Bookmark and Share

“ஷூட்டிங்ஸ்பாட்டில் எனக்கு தெரிந்த முகங்கள் இருக்கவேண்டும்” - காவ்யா மாதவன்..!

காவ்யா மாதவன் ஒரே நேரத்தில் கிட்டத்தட்ட 'ஆகாசவாணி' மற்றும் 'ஷி டாக்ஸி' என இரண்டு படங்களின் படப்பிடிப்பை முடித்துவிட்டார். இதில் 'ஆகாசவாணி' யில் படித்த, நவநாகரிக பெண்ணாக நடித்திருக்கிறார் என்றால் 'ஷி டாக்ஸி' யில் இவரது கேரக்டர் அதிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருக்கிறது.

படிப்பு சரியாக வராமல் பத்தாம் வகுப்பு பெயிலாகி வீட்டிலிருக்கும் காவ்யாவுக்கு, ட்ரைவரான தனது தந்தை இறந்தபின் குடும்பத்தை காப்பாற்ற தந்தை பார்த்த ட்ரைவர் பணியையே தொடர வேண்டிய கேரக்டர்.. இரண்டிற்கும் அவ்வளவு பிரமாதமாக வித்தியாசம் கட்டியிருக்கிறாராம் காவ்யா மாதவன்.

சரி மற்ற மலையாள நடிகைகளைப்போல காவ்யா மாதவன், பிற தென்னிந்திய மொழிகளில் நடிக்க ஆர்வம் காட்டுவது இல்லையே.. ஏன் என கேட்டால் வித்தியாசமான விளக்கம் வருகிறது அவரிடமிருந்து.

“நான் முன்னெல்லாம் மற்ற மொழிகளிலும் நடிப்பது குறித்து யோசிப்பேன். அட்லீஸ்ட் வருடத்திற்கு ஒரு படமாவது வேறு மொழிகளில் நடிக்கும் எண்ணம் இருந்தது உண்மை தமிழில் மூன்று படங்களில் நடித்துள்ளேன்..

ஆனால் போகப்போக எனக்கு தெரிந்த, நான் வசதியாக உணர்கின்ற இந்த மலையாள இண்டஸ்ட்ரியை விட்டு வேறெங்கும் போக மனம் வரவில்லை.. ஷூட்டிங்ஸ்பாட்டிற்கு வந்தால் அங்கே எனக்கு தெரிந்த முகங்களாக இருக்கவேண்டும்..

நான் சொந்த ஊரில், சொந்த வீட்டில் இருப்பதைப்போல உணரவேண்டும். ஹோம்சிக் என்றுகூட வைத்துக்கொள்ளுங்களேன்.. தவிர எனக்கு என்னையே சுயமாக புரமோட் செய்துகொள்ள தெரியாது” என்கிறார் காவ்யா மாதவன்.


Post your comment





Related News
12 வருடத்திற்குப் பிறகு மீண்டும் மாதவனுடன் இணையும் பிரபல நடிகை
யுவன் பாடலை வெளியிடும் மாதவன்
மீண்டும் மாதவனுடன் ஜோடி சேரும் பிரபல நடிகை
சர்வதேச காமென்வெல்த் போட்டியில் இந்தியாவுக்காக பதக்கம் வென்ற மாதவனின் மகன்.!
காயம் காரணமாக மாதவனுக்கு மேலுமொரு சோகம்
பிரபல நடிகர் மாதவனுக்கு திடீர் அறுவை சிகிக்சை - அதிர்ச்சி புகைப்படம் உள்ளே.!
கனடா பிரதமரை சந்தித்த முன்னணி தமிழ் நடிகர் - வைரலாகும் புகைப்படம்.!
மாதவனுக்காக இப்படியொரு கொடுமை - கலங்க வைக்கும் அதிர்ச்சி தகவல்.!
கன்னத்தில் முத்தமிட்டால் குழந்தை அமுதாவுக்கு திருமணம் - மாப்பிள்ளை யார் தெரியுமா?
படங்களுக்கு டாடா சொல்லி சீரியலுக்கு தாவிய மாதவன்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions