காலேஜ் பெண்களுடன் காரில் சுற்றும் காவ்யா மாதவன்..!

Bookmark and Share

காலேஜ் பெண்களுடன் காரில் சுற்றும் காவ்யா மாதவன்..!

கொச்சி, எர்ணாகுளம் பகுதிகளில் அவ்வப்போது நடிகை காவ்யா மாதவன் கால் டாக்சி ஒன்றை ஒட்டிக்கொண்டு செல்வதாகவும் அதில் சில இளம்பெண்கள் அமர்ந்திருப்பதை பார்த்ததாகவும் பொதுமக்கள் ஆங்காங்கே பேசிக்கொள்ள, விஷயம் மலையாள இண்டஸ்ட்ரியிலும் தீயாக பரவியது..

அதன் பிறகு விசாரித்ததில் தான் தெரிந்தது காவ்யா மாதவன் தற்போது, தான் நடித்துவரும் 'ஷி-டாக்சி' படத்திற்காக கால் டாக்சி ஓட்டியிருக்கிறார் என்பது.. ஷாஜி என்பவர் இயக்கியுள்ள இந்தப்படத்தில் கதாநாயகியாக, ஷி-டாக்சி ஓட்டும் ட்ரைவராக நடிக்கிறார் காவ்யா மாதவன்..

 காவ்யா மாதவனிடம் ட்ரைவிங் லைசென்ஸ் இருக்கிறதே தவிர கார்களை அவ்வளவாக ஓட்டி அவருக்கு பழக்கமில்லை. ஆனாலும் இந்தப்படத்தில் ஒரு கைதேர்ந்த ட்ரைவரைப்போல லாவகமாக கார் ஓட்டியிருக்கிறாராம் காவ்யா.

கதைப்படி  கல்லூரி செல்லும் மூன்று மாணவிகளை தினசரி காரில் ஏற்றிக்கொண்டு சென்று வருவதும் அவரது வேலையில் ஒரு முக்கிய அம்சம்... அப்படி அவர் அந்தப்பெண்களுடன் வண்டி ஓட்டிப்போவதைத்தான் பலரும் பார்த்துவிட்டுத்தான், காவ்யா கால் டாக்சி ஒட்டுகிறாரோ என தவறாக புரிந்து கொண்டிருக்கிறார்கள்.


Post your comment





Related News
12 வருடத்திற்குப் பிறகு மீண்டும் மாதவனுடன் இணையும் பிரபல நடிகை
யுவன் பாடலை வெளியிடும் மாதவன்
மீண்டும் மாதவனுடன் ஜோடி சேரும் பிரபல நடிகை
சர்வதேச காமென்வெல்த் போட்டியில் இந்தியாவுக்காக பதக்கம் வென்ற மாதவனின் மகன்.!
காயம் காரணமாக மாதவனுக்கு மேலுமொரு சோகம்
பிரபல நடிகர் மாதவனுக்கு திடீர் அறுவை சிகிக்சை - அதிர்ச்சி புகைப்படம் உள்ளே.!
கனடா பிரதமரை சந்தித்த முன்னணி தமிழ் நடிகர் - வைரலாகும் புகைப்படம்.!
மாதவனுக்காக இப்படியொரு கொடுமை - கலங்க வைக்கும் அதிர்ச்சி தகவல்.!
கன்னத்தில் முத்தமிட்டால் குழந்தை அமுதாவுக்கு திருமணம் - மாப்பிள்ளை யார் தெரியுமா?
படங்களுக்கு டாடா சொல்லி சீரியலுக்கு தாவிய மாதவன்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions