சில மாதங்களில் மணமுறிவு ஏன்?: கணவரை பிரிந்த மலையாள நடிகைகள் மனம் திறக்கிறார்கள்

Bookmark and Share

சில மாதங்களில் மணமுறிவு ஏன்?: கணவரை பிரிந்த மலையாள நடிகைகள் மனம் திறக்கிறார்கள்

மலையாள முன்னணி நடிகை காவ்யா மாதவன். இவர் ‘பிசி’யாக நடித்துக் கொண்டிருந்தபோது, நிஷால் சந்திரா என்பவரை மணந்தார். அவருடன் 3 மாதம் வெளிநாட்டில் குடும்பம் நடத்திய காவ்யா மாதவன் திடீர் என்று கேரளா திரும்பினார்.

அதன் பிறகு கணவரிடம் போகவில்லை. இந்த நிலையில் காவ்யா மாதவன் தன்னை ஏமாற்றி விட்டதாகவும், ஒரு நடிகருடன் அவருக்கு தொடர்பு இருப்பதாகவும் அவரது கணவர் கூறினார். இதையடுத்து தனது கணவர் மீது குடும்ப வன்முறை பிரிவில் நடவடிக்கை எடுக்ககோரி காவ்யா மாதவன் போலீசில் புகார் செய்தார்.

இப்போது கணவரை விட்டு பிரிந்து சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார். மணமுறிவு குறித்து தற்போது முதன் முதலாக கருத்து தெரிவித்துள்ள காவ்யா மாதவன்... ‘திருமணம் நடந்த நாளில் இருந்தே பிரச்சினை தொடங்கி விட்டது. அவர் என் மீது குற்றம்சாட்டுவதிலேயே குறியாக இருந்தார்’ என்று கூறி உள்ளார்.

இதுபோல் மலையாள நடிகை ரக்சனாவும், கணவரை விகாகரத்து செய்து விட்டு தற்போது தீவிரமாக நடித்து வருகிறார். இவர் நடித்த ‘அயன்’ என்ற மலையாளப் படம் சமீபத்தில் தேசிய விருது பெற்றுள்ளது. சில வருடங்களுக்கு முன்பு பெற்றோர் பேசி முடித்த சதாசிவம் என்பவரை ரக்சனா திருமணம் செய்து கொண்டார்.

ஆனால் அடுத்த மாதமே கணவருடன் வாழ பிடிக்கவில்லை என்று கோர்ட்டில் விவாகரத்து மனுதாக்கல் செய்தார். திருமணம் நடந்த 16–வது நாளிலேயே இந்த முடிவை எடுத்தார். இப்போது விவாகரத்தும் பெற்றுள்ளார்.

இதுபற்றி தற்போது வாய் திறந்துள்ள ரக்சனா, ‘‘என் கணவர் நான் சுதந்திரமாக செயல்பட அனுமதிக்கவில்லை. எனவே திருமணம் நடந்த 16–வது நாளிலேயே அவரை விட்டு பிரிய முடிவு செய்தேன்’’ என்ற கூறி இருக்கிறார். 


Post your comment





Related News
12 வருடத்திற்குப் பிறகு மீண்டும் மாதவனுடன் இணையும் பிரபல நடிகை
யுவன் பாடலை வெளியிடும் மாதவன்
மீண்டும் மாதவனுடன் ஜோடி சேரும் பிரபல நடிகை
சர்வதேச காமென்வெல்த் போட்டியில் இந்தியாவுக்காக பதக்கம் வென்ற மாதவனின் மகன்.!
காயம் காரணமாக மாதவனுக்கு மேலுமொரு சோகம்
பிரபல நடிகர் மாதவனுக்கு திடீர் அறுவை சிகிக்சை - அதிர்ச்சி புகைப்படம் உள்ளே.!
கனடா பிரதமரை சந்தித்த முன்னணி தமிழ் நடிகர் - வைரலாகும் புகைப்படம்.!
மாதவனுக்காக இப்படியொரு கொடுமை - கலங்க வைக்கும் அதிர்ச்சி தகவல்.!
கன்னத்தில் முத்தமிட்டால் குழந்தை அமுதாவுக்கு திருமணம் - மாப்பிள்ளை யார் தெரியுமா?
படங்களுக்கு டாடா சொல்லி சீரியலுக்கு தாவிய மாதவன்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions