பாடலாசிரியாராக மாறினார் காவ்யா மாதவன்...!

Bookmark and Share

பாடலாசிரியாராக மாறினார் காவ்யா மாதவன்...!

மலையாள நடிகை காவ்யா மாதவன் கவிதை எழுதுவார் என்பது நமக்கு தெரியும்.. அவ்வளவு ஏன் தனது கவிதைகளை எல்லாம் தொகுத்து 'காவ்யதாளங்கள்' என்ற பெயரில் இசை ஆல்பமாகவும் கூட வெளியிட்டார்.

அதற்கு இசையமைத்தவரும் கூட அவரே தான். இதுதவிர 'மேட்னி' என்கிற படத்தில் 'மௌனமாயி மனசில்' என்கிற பாடலையும் பாடியுள்ளார். அவரை பல பேர் தங்களது படங்களுக்கு பாடல்கள் எழுத சொல்லியும், ஏனோ அதில் ஆர்வம் காட்டாமல் இருந்தார்.

ஆனால் தற்போது அவர் நடித்துள்ள 'ஆகாசவாணி' திரைப்படம் கவிஞராக மட்டும் இருந்த அவரை, திரைப்பட பாடலாசிரியராகவும் மாற்றியுள்ளது. இதற்கு காரணம் காவ்யா மாதவனின் தோழியான சுஜா கார்த்திகா என்பவர்தான்.. அவரது தம்பி சங்கு என்பவர் அடிக்கடி, தான் இசையமைக்கும் ட்யூன்களை காவ்யா மாதவனுக்கு அனுப்பி வைத்து கருத்து கேட்பார்.

அப்படி அனுப்பிய ட்யூன் ஒன்று, தான் நடித்துவரும் 'ஆகாசவாணி' படத்திற்கு சரியாக பொருந்துவது போல் காவ்யாவுக்கு தோன்றியதாம். இதை சங்குவிடம் சொல்ல, அவரோ காவ்யா மாதவனே இந்த ட்யூனுக்கு பாட்டெழுதினால் நன்றாக இருக்கும் என்று சொன்னாராம்.

ஆனால் காவ்யாவோ அவர் ஏதோ ஜோக்கடிக்கிறார் என நினைத்து, படத்தின் இயக்குனர் தயாரிப்பாளரிடம் இதுபற்றி ஏதேச்சையாக பேசும்போது கூறியுள்ளார். ஆனால் அவர்களோ இதை சீரியஸாக எடுத்துக்கொண்டு காவ்யா மாதவனை பாட்டெழுத வைத்துவிட்டார்கள்.

காவ்யா மாதவனுக்கு படத்தின் கதையோட்டம் நன்கு தெரியும் என்பதால் பாடல் வரிகளும் அருமையாக வந்துள்ளதாம்.

 

 

 


Post your comment





Related News
12 வருடத்திற்குப் பிறகு மீண்டும் மாதவனுடன் இணையும் பிரபல நடிகை
யுவன் பாடலை வெளியிடும் மாதவன்
மீண்டும் மாதவனுடன் ஜோடி சேரும் பிரபல நடிகை
சர்வதேச காமென்வெல்த் போட்டியில் இந்தியாவுக்காக பதக்கம் வென்ற மாதவனின் மகன்.!
காயம் காரணமாக மாதவனுக்கு மேலுமொரு சோகம்
பிரபல நடிகர் மாதவனுக்கு திடீர் அறுவை சிகிக்சை - அதிர்ச்சி புகைப்படம் உள்ளே.!
கனடா பிரதமரை சந்தித்த முன்னணி தமிழ் நடிகர் - வைரலாகும் புகைப்படம்.!
மாதவனுக்காக இப்படியொரு கொடுமை - கலங்க வைக்கும் அதிர்ச்சி தகவல்.!
கன்னத்தில் முத்தமிட்டால் குழந்தை அமுதாவுக்கு திருமணம் - மாப்பிள்ளை யார் தெரியுமா?
படங்களுக்கு டாடா சொல்லி சீரியலுக்கு தாவிய மாதவன்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions