ஜனாதிபதி போட்டோவை காட்டி பயணிகளை மிரட்டும் காவ்யா மாதவன்..!

Bookmark and Share

ஜனாதிபதி போட்டோவை காட்டி பயணிகளை மிரட்டும் காவ்யா மாதவன்..!

கால் டாக்சியை மையப்படுத்தி மலையாளத்தில் ஷாஜி என்பவர் இயக்கியுள்ள 'ஷி டாக்ஸி' என்கிற படத்தில் கால் டாக்ஸி ட்ரைவராக நடித்திருக்கிறார் காவ்யா மாதவன்.

கதைப்படி டாக்ஸி ட்ரைவரான அவரது தந்தை இறந்துவிடவே, குடும்ப சூழ்நிலை காரணமாக கால் டாக்ஸி ஓட்டி சம்பாதிக்கும் நிலைக்கு தள்ளப்படுகிறார் காவ்யா மாதவன்.

கல்லூரி செல்லும் மூன்று மாணவிகளை தினசரி காரில் ஏற்றிக்கொண்டு சென்று வருவதும் அவரது வேலையில் ஒரு முக்கிய அம்சம்.. இதுபோக மீதி நேரங்களில் கிடைக்கும் சவாரிக்கு போகும் காவ்யா மாதவன் காரில் சவாரி என்கிற பெயரில் ஏறும் சில அடாவடி பேர்வழிகள், அவரிடம்  ஏதாவது வாலாட்ட நினைத்தால் அதற்கும் ஒரு வழி வைத்திருக்கிறாராம்.

அதாவது அவரது தந்தை டாக்ஸி ஒட்டிய காலத்தில் கேரளாவுக்கு வரும் ஜனாதிபதி அவரது காரில் சுற்றிப்பார்க்கப்போவது வழக்கமாம். அப்போது அவரது தந்தை, ஜனாதிபதியுடன் எடுத்த போட்டோவை எப்போதும் காரில் வைத்திருக்கும் காவ்யா மாதவன் அதைக்காட்டி, தனக்கு போலீஸ் உயர் அதிகாரி வரை தெரியும் என உதார்விட்டே வம்பிழுப்பவர்களை வழிக்கு கொண்டுவந்து விடுகிறாராம்.

இந்தவிதமாக காவ்யாவின் பின்னணியை சுவாரஸ்யமாக பின்னியிருக்கிறாராம் இயக்குனர் ஷாஜி சுரேந்திரன்.

 


Post your comment





Related News
12 வருடத்திற்குப் பிறகு மீண்டும் மாதவனுடன் இணையும் பிரபல நடிகை
யுவன் பாடலை வெளியிடும் மாதவன்
மீண்டும் மாதவனுடன் ஜோடி சேரும் பிரபல நடிகை
சர்வதேச காமென்வெல்த் போட்டியில் இந்தியாவுக்காக பதக்கம் வென்ற மாதவனின் மகன்.!
காயம் காரணமாக மாதவனுக்கு மேலுமொரு சோகம்
பிரபல நடிகர் மாதவனுக்கு திடீர் அறுவை சிகிக்சை - அதிர்ச்சி புகைப்படம் உள்ளே.!
கனடா பிரதமரை சந்தித்த முன்னணி தமிழ் நடிகர் - வைரலாகும் புகைப்படம்.!
மாதவனுக்காக இப்படியொரு கொடுமை - கலங்க வைக்கும் அதிர்ச்சி தகவல்.!
கன்னத்தில் முத்தமிட்டால் குழந்தை அமுதாவுக்கு திருமணம் - மாப்பிள்ளை யார் தெரியுமா?
படங்களுக்கு டாடா சொல்லி சீரியலுக்கு தாவிய மாதவன்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions