காவ்யா மாதவனின் அடுத்த படம் மெடிக்கல் த்ரில்லர்...!

Bookmark and Share

காவ்யா மாதவனின் அடுத்த படம் மெடிக்கல் த்ரில்லர்...!

மலையாள நடிகை காவ்யா மாதவனுக்கு கடைசியாக அவர் நடிப்பில் வெளியான  ஷி டாக்ஸி படம் சரியாக போகாதது மிகுந்த ஏமாற்றம் தான். இத்தனைக்கும் அந்தப்படத்தில் டாக்ஸி ட்ரைவராக எல்லாம் மாறி படம் முழுக்க சிரமப்பட்டு நடித்திருந்தார்.

ஆனால் பலன் ஜீரோ தான். இப்போது அதையெல்லாம் தூக்கி வைத்துவிட்டு அடுத்ததாக ஹீரோயினை மையப்படுத்தி எடுக்கப்பட இருக்கும் புதிய படத்திற்கு தயாராகிவிட்டார் காவ்யா. சலு ஜார்ஜ் என்பவர் இயக்கும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்டில் துவங்குகிறது.

இந்தப்படத்தின் சிறப்பு என்னவென்றால் இது திகிலும் மர்மமும் கலந்த மெடிக்கல் த்ரில்லராக உருவாக இருக்கிறது. மருத்துவ துறையில் நிகழும் ஓர் ஆச்சர்யமான நிகழ்வையும் அதனை ஒட்டி நடக்கும் பிரச்னைகளையும் மையப்படுத்தி தான் இதன் கதை பின்னப்பட்டிருக்கிறதாம்.

படத்தின் பெரும்பகுதியை சஸ்பென்சும், விசாரணையும் தான் ஆக்கிரமிப்பு செய்யுமாம். காவ்யா மாதவனுக்கு இதில் மிகவும் போல்டான கேரக்டர் என்பதைத்தவிர மற்ற விஷயங்கள் பற்றி இப்போதே சொல்ல தயங்குகிறார் இயக்குனர் சலு ஜார்ஜ்.


Post your comment





Related News
12 வருடத்திற்குப் பிறகு மீண்டும் மாதவனுடன் இணையும் பிரபல நடிகை
யுவன் பாடலை வெளியிடும் மாதவன்
மீண்டும் மாதவனுடன் ஜோடி சேரும் பிரபல நடிகை
சர்வதேச காமென்வெல்த் போட்டியில் இந்தியாவுக்காக பதக்கம் வென்ற மாதவனின் மகன்.!
காயம் காரணமாக மாதவனுக்கு மேலுமொரு சோகம்
பிரபல நடிகர் மாதவனுக்கு திடீர் அறுவை சிகிக்சை - அதிர்ச்சி புகைப்படம் உள்ளே.!
கனடா பிரதமரை சந்தித்த முன்னணி தமிழ் நடிகர் - வைரலாகும் புகைப்படம்.!
மாதவனுக்காக இப்படியொரு கொடுமை - கலங்க வைக்கும் அதிர்ச்சி தகவல்.!
கன்னத்தில் முத்தமிட்டால் குழந்தை அமுதாவுக்கு திருமணம் - மாப்பிள்ளை யார் தெரியுமா?
படங்களுக்கு டாடா சொல்லி சீரியலுக்கு தாவிய மாதவன்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions