அம்மா பிள்ளையாக இருக்கும் கயல் ஆனந்தி!

Bookmark and Share

அம்மா பிள்ளையாக இருக்கும் கயல் ஆனந்தி!

கயல், பொறியாளன் ஆகிய படங்களைத் தொடர்ந்து ஆனந்தியின் நடிப்பில் சண்டிவீரன், த்ரிஷா இல்லன்னா நயன்தாரா, விசாரணை ஆகிய படங்கள் அடுத்தடுத்து திரைக்கு வரத்தயாராகிக்கொண்டிருக்கின்றன.

இந்த படங்களில் நடித்து முடித்து விட்ட அவர் தற்போது, பைசல், பண்டிகை படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். மேலும், இதற்கு முன்பே தெலுங்கில் பல படங்களில் நடித்திருக்கிறார் ஆனந்தி. இருப்பினும் சினிமாவைப் பொறுத்தவரை எந்த விசயமாக இருந்தாலும் தனது தாய்க்குலத்திடம் கலந்தே அவர் முடிவெடுக்கிறார். கதை கேட்பது தொடங்கி கால்சீட், சம்பளம் பேசுவது வரை தனது அம்மாவையே மேனேஜர் போன்று நியமித்திருக்கிறார். எந்தவொரு முடிவையும் தான் சுயமாக எடுப்பதில்லை.

இந்த நிலையில், சில டைரக்டர்கள் கதை சொல்லும்போது, காதல் காட்சிகளில் இந்த அளவுக்கு ஹீரோக்களுடன் நெருக்கம் காட்ட வேண்டும் என்று அவரிடம் சொன்னால், அப்படி நடிப்பதா வேண்டாமா என்பது பற்றிகூட தானே முடிவெடுக்காமல் அதற்கும் அம்மாவின் முகத்தைதான் பார்க்கிறாராம் ஆனந்தி.

அவர் ஓகே என்று தலையசைத்தால் மட்டுமே இவரும் ஓகே சொல்கிறாராம். அந்த அளவுக்கு எதுவாக இருந்தாலும் அம்மா சொன்னா எனக்கும் ஓகேதான் என்று அம்மா பிள்ளையாக இருக்கிறாராம் கயல் ஆனந்தி.


Post your comment





Related News
5 வருடங்களில் கயல் ஆனந்திக்கு இது முதல்முறை
காலாவை தொடர்ந்து பா.ரஞ்சித்தின் அடுத்த ரிலீஸ் - லேட்டஸ்ட் தகவல்
நாகினி சீரியல் கவர்ச்சி நடிகைக்கு கிடைத்த பெரும் வரவேற்பு! ரசிகர்கள் அதிர்ச்சி
அஞ்சனா தலையில் விழுந்த இடி, கயல் சந்திரன் மீது மோசடி புகார்.!
கயல் ஆனந்தியின் கால்களை ரசித்த இசையமைப்பாளர்!
மலையாள நடிகையை டாவடிக்கும் கயல் சந்திரன்!
டூப் இல்லாமல் நடித்து ரத்தம் வழிய மிதி வாங்கிய கயல் சந்திரன் - என்ன நடந்தது?
கந்து வட்டி கொடுமையால் கலங்கி நிற்கும் பிரபல நடிகை - வைரலாகும் புகைப்படம்.!
‘பசங்க’ பாண்டியின் நடிப்பை பார்த்து கால்ஷீட் கொடுத்த ‘கயல்’ ஆனந்தி
2 கன்டிஷன் போடும் ஆனந்தி: கடுப்பில் பல்லை கடிக்கும் தயாரிப்பாளர்கள்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions