நம்பிக்கை இழக்காத கயல் ஆனந்தி!

Bookmark and Share

நம்பிக்கை இழக்காத கயல் ஆனந்தி!

பொறியாளன் படத்தை விட பிரபுசாலமன் இயக்கத்தில் நடித்த கயல் படத்தைதான் பெரிய அளவில் எதிர்பார்த்தார் ஆனந்தி. அமலாபாலுக்கு எப்படி மைனா படம் திருப்புமுனையாக அமைந்ததோ அதே அளவுக்கு இந்த படமும் வெற்றி பெற்று தன்னை உச்ச நடிகையாக்கும் என்றுதான் நினைத்தார்.

ஆனால், எதிர்பார்ப்புகளுக்கிடையே வெளியான அப்படம் அந்த அளவுக்கு ஓடவில்லை. இருப்பினும், கயல் ஆனந்தியின் நடிப்பாற்றலை வெளிப்படுத்தும் வித்தியாசமான கதாபாத்திரம் என்பதால் அவர் சோடை போகவில்லை.

அதோடு, அந்த படத்தில் அவரது நடிப்பை கேள்விப்பட்டு சண்டிவீரன், த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா, விசாரணை ஆகிய படங்களுக்கும் புக் பண்ணினர். ஆக, இப்போது விசாரணை, சண்டிவீரன் படங்களில் நடித்து விட்ட ஆனந்தி, அடுத்து ஜி.வி.பிரகாசுடன் த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா படத்தில் நடித்து வருகிறார்.

மேலும், நடித்துள்ள இரண்டு படங்களும் தன்னை காப்பாற்றும் என்ற நம்பிக்கையில் இருக்கும் ஆனந்தி, தமிழ் சினிமாவில் நடிக்க நான் முயற்சி எடுத்தபோது பிரபுசாலமன் போன்ற பெரிய டைரக்டரின் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கவே இல்லை.

ஆனால் அது கிடைத்தது. அதனால் தமிழ் சினிமா இன்னும் என்னை பெரிய இடத்துக்கு கொண்டு செல்லும் என்கிற நம்பிக்கை எனக்கு துளியும் குறையவில்லை. கண்டிப்பாக கைவசமிருக்கும் படங்கள் ரிலீசாகும்போது நானும் தமிழில் பேசப்படும் நடிகையாக இருப்பேன் என்று கூறி வருகிறார் ஆனந்தி. 


Post your comment





Related News
5 வருடங்களில் கயல் ஆனந்திக்கு இது முதல்முறை
காலாவை தொடர்ந்து பா.ரஞ்சித்தின் அடுத்த ரிலீஸ் - லேட்டஸ்ட் தகவல்
நாகினி சீரியல் கவர்ச்சி நடிகைக்கு கிடைத்த பெரும் வரவேற்பு! ரசிகர்கள் அதிர்ச்சி
அஞ்சனா தலையில் விழுந்த இடி, கயல் சந்திரன் மீது மோசடி புகார்.!
கயல் ஆனந்தியின் கால்களை ரசித்த இசையமைப்பாளர்!
மலையாள நடிகையை டாவடிக்கும் கயல் சந்திரன்!
டூப் இல்லாமல் நடித்து ரத்தம் வழிய மிதி வாங்கிய கயல் சந்திரன் - என்ன நடந்தது?
கந்து வட்டி கொடுமையால் கலங்கி நிற்கும் பிரபல நடிகை - வைரலாகும் புகைப்படம்.!
‘பசங்க’ பாண்டியின் நடிப்பை பார்த்து கால்ஷீட் கொடுத்த ‘கயல்’ ஆனந்தி
2 கன்டிஷன் போடும் ஆனந்தி: கடுப்பில் பல்லை கடிக்கும் தயாரிப்பாளர்கள்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions