வெயிட் போடும் கயல் ஆனந்தி!

Bookmark and Share

வெயிட் போடும் கயல் ஆனந்தி!

பிரபுசாலமனின் கயல் படத்தில் நடித்தவர் ஆனந்தி. அந்த படத்திற்கு பிறகு இவரும் மைனா அமலாபால் பெரிய நடிகையாகி விடுவார் என்றுதான் கருதப்பட்டது. அதனால் கயல் வெளியாவதற்கு முன்பே அவருக்கு விசாரணை, சண்டிவீரன் போன்ற படங்கள் கமிட்டாகின. ஆனால் கயல் அதிர்ச்சி தோல்வி கொடுத்து விட்டது.

இருப்பினும், கைவசம் அதர்வா, அட்டகத்தி தினேஷின் படஙக்ள் இருந்ததால் தப்பினார் ஆனந்தி. இந்த படங்கள் எதிர்பார்க்கப்பட்டு வருவதால், தற்போது ஜி.வி.பிரகாஷின் த்ரிஷா இல்லன்னா நயன்தாரா, பைசல் போன்ற படங்களிலும் கமிட்டாகி நடித்து வருகிறார்

.இதுதவிர இன்னும் சில படங்களில் ஆனந்தியை நடிக்க வைக்கும் முயற்சிகளும் நடந்தன. ஆனால், அவரை ஸ்கிரீனில் பார்த்து ஓகே செய்த இயக்குனர்கள் நேரில் பார்த்தபோது ரொம்ப சின்ன பொண்ணாக இருக்கிறாரே என்று தயங்கி வேறு நடிகைகள் பக்கம் திரும்பி விட்டார்களாம்.

இதையடுத்து, தென்னிந்திய ரசிகர்கள் மட்டுமின்றி இயக்குனர்களுக்கும் ஹீரோயினிகள் ஓரளவு வெயிட் போட்டிருந்தால்தான் பிடிக்கும் என்பதை புரிந்து கொண்ட ஆனந்தி, அவர்களின் ரசனைக்கேற்ப தனது உடம்பில் பூசினாற் போன்று வெயிட் போடும் முயற்சியில் இறங்கியிருக்கிறார்.

அதனால் இதுவரை தனக்கு பிடித்தனமான பிரியாணி போன்ற பேவரிட் உணவுகளை பார்த்தாலே மிரண்டு ஓடிய ஆனந்தி, தற்போது அவ்வப்போது நான்வெஜ் பிரியாணியை புல் கட்டு கட்டி வருகிறாராம். ஆக, இனிவரும் படங்களில் சற்று உடல்பெருத்த ஆனந்தியை பார்க்கலாமாம்


Post your comment





Related News
5 வருடங்களில் கயல் ஆனந்திக்கு இது முதல்முறை
காலாவை தொடர்ந்து பா.ரஞ்சித்தின் அடுத்த ரிலீஸ் - லேட்டஸ்ட் தகவல்
நாகினி சீரியல் கவர்ச்சி நடிகைக்கு கிடைத்த பெரும் வரவேற்பு! ரசிகர்கள் அதிர்ச்சி
அஞ்சனா தலையில் விழுந்த இடி, கயல் சந்திரன் மீது மோசடி புகார்.!
கயல் ஆனந்தியின் கால்களை ரசித்த இசையமைப்பாளர்!
மலையாள நடிகையை டாவடிக்கும் கயல் சந்திரன்!
டூப் இல்லாமல் நடித்து ரத்தம் வழிய மிதி வாங்கிய கயல் சந்திரன் - என்ன நடந்தது?
கந்து வட்டி கொடுமையால் கலங்கி நிற்கும் பிரபல நடிகை - வைரலாகும் புகைப்படம்.!
‘பசங்க’ பாண்டியின் நடிப்பை பார்த்து கால்ஷீட் கொடுத்த ‘கயல்’ ஆனந்தி
2 கன்டிஷன் போடும் ஆனந்தி: கடுப்பில் பல்லை கடிக்கும் தயாரிப்பாளர்கள்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions